சீக்கிய மதகுருவான, குருகோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாளை நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; இதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

குருகோவிந்த் சிங்கின் சீடரும், மொகலாய ஆட்சிக்கு எதிராக போராடிய சீக்கியப்படைத் தளபதியுமான பாபா பந்தா சிங்கின் 300-ஆவது நினைவுதினம் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லி, இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

மராட்டிய மாமன்னர் சிவாஜியைப்போன்று வீரத்துடன் திகழ்ந்த பாபாபந்தா சிங், பொதுமக்களுக்கு சமஉரிமை வேண்டி போராடினார். சாதாரணமக்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் எனவும், அதன் மூலம் அவர்களது வாழ்வு மேம்படவேண்டும் என்று எண்ணி, அதற்காக உழைத்தார்.

எவ்வளவு இடர்கள் வந்த போதும் தான் கொண்ட கொள்கைகளிலிருந்து சற்றும் பாதைமாறாத நெஞ்சுரம் கொண்டவராக அவர் திகழ்ந்தார். சாமானியமக்களுக்கு நியாயம் வேண்டி போராடியதன் மூலம், தன் வாழ்நாளில் உண்மையான பொதுவுடைமை வாதியாக பாபா பந்தாசிங் திகழ்ந்தார்.

அந்த காலத்தில் மன்னர்கள் தங்களது உருவம்பொறித்த அரசு நாணயங்களை வெளியிடுவது வழக்கமாக இருந்துவந்தது. ராஜவம் சத்தில் பிறந்தவரான பாபா பந்தா சிங்குக்கும் அந்தவாய்ப்பு இருந்தபோதும், சீக்கியமதத்தை சேர்ந்த பல்வேறு குருக்களின் உருவம்பொறித்த நாணயங்களையே அவர் வெளியிட்டார். குருகோவிந்த் சிங்குக்கும், பாபா பந்தா சிங்குக்கும் இடையேயான உறவு, குரு-சிஷ்யருக்கான சிறந்த உதாரணமாகும்.

இன்றைய இளைஞர்கள், பாபாபந்தா சிங்கை தங்களது முன்னுதாரணமாகக் கொண்டு, அவரது கொள்கைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

எந்தவொரு சமூகம், தமது வரலாற்றை மறந்து விடுகிறதோ, அந்தச் சமூகத்தால் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது. இதனைக் கருத்தில்கொண்டு, வரும் அக்டோபர் மாதம் வரவுள்ள சீக்கிய மதகுருவான, குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாளை நாடுமுழுவதும் கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய உயர் நிலைக் குழுவும் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.