அமெரிக்கா வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைப் பிரச்னையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ‌”ஹிலாரி கிளிண்டனிடம்” கோரிக்கை வைத்துள்ளார் .

இந்தியாவிக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரிகிளிண்டன் இன்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து_ பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவை அமெரிக்கா வருமாறு அழைப்புவிடுத்தார். ஜெயலலிதாவின் அமெரிக்க பயணத்தின் மூலமாக_ தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள முடியும் என கூறினார்.

ஹிலாரிகிளிண்டனிடம் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் வசித்து வருவதாகவும், இன்னும் அவர்கள் சொந்த இடங்களுகு திரும்ப முடியவில்லை எனவும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply