உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்துபோட்டியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் விதமாக மாவட்டந்தோறும் ஆலோசனைகூட்டங்களை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், ஈரோட்டில் இன்று பா.ஜ.கட்சி ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வுகாண பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுத்துவருகிறார். இதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களையும், இருநாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
 
1974-ம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க.வும், மற்றும் அ.தி.மு.க.வும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. இப்போது அதுபற்றி பேசிவருவது நியாயமா? பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் நீர்ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டில் உளவுதுறை இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும். ஐ.எஸ். உளவாளி திருப்பூரில் தங்கியிருந்து கடைவைத்து நடத்தும் அளவிற்கு இருப்பது வேதனைக்குரியது. உளவு படை இன்னும் வேகமாக செயல்படவேண்டும். கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது. தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சியையும் பாஜகவுடன் இணைய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் இதேபோல் அனைத்துகட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2 responses to “உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துபோட்டியிட வேண்டும்”

  1. Admin says:

    yes

  2. **M1ch@3L says:

    B.J.P. CONTESTING IN THE LOCAL BODY ELECTION WITHOUT ANY ALLIANCE?

Leave a Reply