மத்திய அமைச்சர் ஹன்ஸ் ராஜ் ஆகிர் தனது அரசாங்க காரில்செல்லாமல் மற்றொரு காரில் சென்றதால் அதிர்ஷ்டவசமாக விபத்தில்இருந்து தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூர் மாவட்டத்துக்கு சென்றிருந்த மத்திய உள்துறைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகிர் அங்கிருந்து டெல்லிசெல்வதற்காக நாக்பூர் விமான நிலையத்துக்கு அரசுவாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

செல்லும்வழியில் படோலி என்ற கிராமத்தில் அவர் பாஜக. தொண்டர்களை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நீண்டநேரம் நீடித்ததால் விமானத்துக்கு தாமதமாகி யுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனது பாதுகாவலர் களையும், கட்சி தொண்டர்களையும் தனது காரில்வரும்படி கூறிவிட்டு அவர் மற்றொரு காரில் ஏறி விமானநிலையத்துக்கு சென்றுள்ளா்ர்.

இதற்கிடையில் அமைச்சரின் பாதுகாவலர்களும், கட்சி தொண்டர்களும் பயணம்செய்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் மழை பெய்துவருவதன் காரணமாக சாலையில் இருந்து வழுக்கிசென்ற கார் மரத்தில் மோதியது என்று கூறப்படுகிறது.இதில் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பினர்.

மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் தனதுகாரில் செல்லாமல் மற்றொரு காரில் சென்றதால் அதிர்ஷ்ட வசமாக விபத்தில் இருந்து தப்பிள்ளார்.

Leave a Reply