இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை போன்ற வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதிவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தில்லியில் மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் செய்தியா ளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பயங்கரவாத தாக்குதல்கள், மதக் கலவரத்தில் உயிரிழக்கும் அப்பாவிமக்களுக்கு உதவிசெய்யும் திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அமல்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழப் போர் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேற்கண்ட ரூ.3 லட்சம் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். எனவே, நாட்டின் எந்தப்பகுதியிலும் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலிலோ, மாவோயிஸ்ட் வன்முறையிலோ, எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடித் தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் பலியாகும் அப்பாவிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இந்தநிதியானது, உயிரிழப்பவரின் நெருங்கிய உறவினருக்கு அளிக்கப்படும்.

இதேபோல், தாக்குதலில் 50 சதவீதத்துக்கும் மேல் பலத்த காயமடைந் தோருக்கும் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இருப்பினும், காயமடைந் தோருக்கான உதவித்தொகையானது, அவரது குடும்பத்தைச்சேர்ந்த யாருக்கும் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வேலை வாய்ப்பு அளிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அளிக்கப்படும்.

விரைவில் அறிவிக்கை: ரூ.5 லட்சம் நிதிவழங்கும் முடிவுக்கு விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத்தொடர்ந்து, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசுவெளியிடும் என்று அந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட அப்பாவிமக்கள் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதுகாப்புப்படையினர் 7 பேர் பலியாகினர். அதே ஆண்டில், பயங்கரவாத தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 17 பேர் உயிரிழந்தனர். இதேபோல், மாவோயிஸ்டுகளின் வன்முறையில் பொது மக்கள் 168 பேர் இறந்தனர்.

இதுபோன்ற தாக்குதல்களில் உயிரிழக்கும் மத்திய பாதுகாப்புப்படையினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண உதவியும், அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.