ஒரு நாட்டின் தலைவர் என்பவர் தன் நாட்டில் உள்ள குறை அடுத்த நாட்டில் உள்ள நிறை இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்.இதை உறுதிபடுத்துவது போலவே இருக்கிறது மோடியின் ஒவ்வொரு வெளி நாட்டு பயணங்களும். மோடி இந்திரா காந்திக்கு பிறகு யாருமே எட்டிப்பார்க்காத மொசாம்பிக் நாட்டுக்கு சென்று அந்த நாட்டில் இந்தியா வுக்கு தேவையான பருப்பு வகைகளை அங்கேயே விளைவிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளார்.

ஏழைகளுக்கு குறைந்த விலையில் நிறைய புரதசத்து கிடைக்க வழி செய்யக்கூடிய ஒரு சிறந்த தானியம் பருப்பு தாங்க.. நாம் உண்ணும் உணவில் கலந்து இருக் கும் பருப்பில் 25 சதவீத புரதச் சத்து உள்ளது. 1990களில் நமது நாட்டு மக்கள் சராசரியாக நாள் ஒன்றிற்கு 60 கிராம் பருப்பை உணவாக எடுத்துக் கொண்டிருந்தனர் .இது. அது 2010 ம் ஆண்டு கணக்கின் படி 36 கிராமாகக் குறைந்து ள்ளது. அதாவது நமது மக்கள் தேவையான அளவு பரதச் சத்துப் பெறவில்லை.ஒரு ஆரோக்கியமான உணவினைமக்களுக்கு அளிக்க அரசு ஆர்வம் காட்ட வில்லை.

பருப்புக்கு பஞ்சம் வந்து தாறுமாறாக விலையேறிக் கொண்டிருக்கும் இந்தியா தான் பருப்பு உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் உள்ள நாடு. அதாவது உலகின் மொத்த பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதம். அதே நேரத்தில் நமது பயன்பாட்டுக்கு தேவையான பருப்பு 30 சதவீதம்.

நமது நாட்டின் பருப்பு உற்பத்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது தேவையைக் காட்டிலும் அதிகம் இருந்துள் ளது. அதனால் ஏற்றுமதியும் செய்திருக்கி றோம். ஆனால் மக்கள் தொகை அதிகரித்த அளவிற்கு பருப்பு பயிர் செய்யும் நிலப்பரப்பு உயராததும், உற்பத்தி அளவு மிகக் குறைவாக இருப்பதுமே இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பருப்பு பற்றாக்குறைக்கும், இறக்குமதிக்கும் காரணங்களாகும்.

நமது நாட்டின் பருப்பு உற்பத்தி 16 மில்லியன் டன். ஆனால்நமக்கு தேவையோ 20 மில்லியன் டன்னுக்கு மேலாகும்.இதனை ஈடுகட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.வரும் காலத்தில் நமது நாட்டின்பருப்பு தேவையானது 30 மில்லியன் டன்னுக்கு மேலாகஅதிகரித்து விடும் என்பதால் நம் நாட்டில் பருப்பு உற்பத்தி யை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

அதாவது இன்றுள்ள உற்பத்தி போன்று இரண்டு மடங் காக நமது தேவை உயரும்.இதற்காக பருப்பு இறக்குமதி அதிகரிக்கும் பொழுது அதனால்நமக்கு பாதிப்பு வரும். அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வ தை விட அந்த நாடுகளில் பருப்பினை பயிர் செய்து விளைந்தபிறகு இறக்குமதி செய்து கொள்வது நல்ல லாபமாகும்.

இறக்குமதி என்பது ஒரு குறுகிய காலத்தீர்வு.உற்பத்தி என்பது நீண்டகாலத்தீர்வு.எதையும் நீண்ட காலத் தீர்வு க்குதிட்டம் வகுக்கும் நம்முடைய பிரதமர் இதற்கும் தீர்வு காண வகுத்ததிட்டம் தான் ஆப்பிரிக்க சுற்றுப்பய ணம். ஆப்பி ரி க்க நாடுகளில் பருப்பு உற்பத்தி செய்யும் மண்ணின் வளம்இந்தியாவில் உள்ளதை விட அதிகமா க உள்ளது.

அதாவது நம் நாட்டில் பருப்பு பயிர் விளைச்சல் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 638 கிலோவாக உள்ளது
ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் விளைச்சல் ஹெக்டேரு க்கு 1,500 கிலோவுக்கு மேலாகஉள்ளதென புள்ளி விவர ங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் தன்னுடைய ஆப்பிரிக்கசுற்றுப்பயணத்தின் பொழுது இந்திய பிரதமர் க ள் எட்டிப்பார்க்காத மொசாம்பிக் நாட்டுக்கு சென்றார்.

மொசாம்பிக் நாட்டில் பயிர் செய்யப்படும் பருப்பு வகை கள் சுவை அதிகமாகவும் விளைச்சல் அதிகமாகவும் உள்ள காரத்தினால் இந்தியாவுக்கு தேவையான பருப்புக் களை இனி மொசாம்பியாவிலும் இந்தியாவே உற்பத்தி செய்து இறக்குமதி செய்து கொள்ள ஒப்பந்தம் கையெழு த்தாகி உள்ளது.

ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள வறுமை காரணத்தி னால் அங்கு விவசாய நிலங்களும் விவாசாய கூலிகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கும் வேலையை கொடுத்து வறுமையை ஒழிக்க உதவி புரிகிறார்.அதே நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான பருப்புகளை அங்கேயே உற்பத்தி செய்யும் நிறுவனமாக மொசாம்பிக் நாட்டை யும் மாற்றிவிட்டார்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.