இந்திய சீனா எல்லையான லே-லடாக்கில் நம்முடைய ராணுவம் 100 T-72 டாங்கிகளை கொண்டு போய் சீனாவை நோக்கி வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சண்டை நடந்து 54 வருடங்கள் முடிய உள்ள நிலையில் இது வரை அங்கே டாங்கிகள் இல்லாமல் இருந்தது என்றால் நம் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து கொள்ளுங்கள்.

இதனால்தான் லடாக் பகுதியில் சீனா அடிக்கடி அத்து மீறி வருகின்றது. இதனைத் தடுக்கும் வகையில் லடாக் பகுதியில், சீன எல்லைக்கு சற்று தொலைவில் 100 அதிநவீன ராணுவ டாங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன . இன்னும் சில ராணுவ டாங்குகள் அங்கு செல்ல உள்ளன. லடாக் போன்ற உயரமான மலைச்சிகரத்தில் டாங்குகளை கொண்டு செல்வது சிரமம். அதனால்தான் அங்கு இந்தியா பாதுகாப்புக்கு பெரிய அளவில் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வந்தது. ஆனால் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு அனைத்து தடைகளையும் தாண்டி லே-லடாக் பகுதிக்கு டாங்கிகளை அனுப்பியுள்ளது.

குளிர் காலத்தில் சுமார் -50 டிகிரி வெப்பநிலை இருக்கும் இந்த லடாக்கில் மேற்கே பாகிஸ்தான் எல்லை பகுதியான கார்கிலும் கிழக்கே சீன எல்லையான 'லே'வும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17,500 அடிக்கும் மேல் உயரத்தில் இருக்கும் லடாக்கிற்கு செல்ல சரியான சாலைவசதிகள் இல்லாமல் இருந்தது மோடி அரசாங்கம் சாலைகள் போட்டு இப்பொழுது டாங்கிகளை கொண்டு சென்றுள்ளது.

மைனஸ் -50 டிகிரி செல்சியஸ் உறைபனியிலும் இந்த டாங்குகளை இயங்க செய்யும் வகையில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நவீன ரக இஞ்ஜின்களை லடாக்கில் உள்ள டி.ஆர்.டி.ஓ வடிவமைத்துT-72 டாங்கியில் பொருத்தியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள நீளம் 3500கிலோ மீட்டர் தூரம் கொண்ட எல்லைபகுதியில் இங்கு தான் 1962 போரின் மூலம் இந்தியாவின் ஒன்று பட்ட காஸ்மீரில் இருந்து சீனா கைப்பற்றிய அக்சாய்சின் என்கிற 38,000 கிலோமீட்டர் பகுதி உள்ளது. காஸ்மீர் ராஜா ஹரி சிங் நமக்கு கொடுத்த இந்த இடத்தை சீனா அன்றைய இந்தியராணுவத்தின் திட்டமிடல் இல்லாததால் இழந்து விட்டது.

ஆனால் பவுத்தர்கள் என்று அதிகம் வசிக்கும் லடாக்கில் தொலை தொடர்பே மோடி ஆட்சி வந்த பிறகுதான் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் 16000 அடி உயரத்தில் செல்போன் டவர் அமைத்து மைபைல் வசதி ஏற்படுத்தபட்டது. இதனால் நம்முடைய ராணுவ வீரர்களுக்கும் லடாக் மக்களுக்கும் இடையே தொலை
தொடர்பு உண்டானது.

இதோடு டி.ஆர்.டி.ஓவின்(Defence Research and Development Organization)ஆராய்ச்சி மையம் ஒன்று 2015 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் திறக்கக்கபட்டு அங்கேயே டாங்கிகளை வடிவமைக்கும் வேலையும் தொடங்கப்பட்டது. இதனால் 41.5 டன் எடையுள்ள இந்த ரஷ்ய தொழில் நுட்பத்தில் தயாரான T-72 டாங்கிகள் அங்குள்ள குளிர் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றியமைக்கபட்டது.

இந்த லடாக் டி.ஆர்.டி.ஓ தான் உலகத்திலேயே அதிக உயரத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம். இங்கிருந்து சீனா ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொள்ளும் தகவல் பறிமாற்றங்கள் இடைமறிக்கபட்டு கண்காணிக்கப்படுகிறது. இப்படி இந்திய ராணுவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, எல்லையை பாதுகாக்க டாங்கிகளையும் துணைக்கு அனுப்பியுள்ள மோடி அரசுக்கு ஒரு சல்யூட்.

One response to “பகை வரும்முன் முடிக்க காத்திருக்கும் இந்திய ராணுவம்!”

  1. jagadeesan says:

    இப்படி இந்திய ராணுவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, எல்லையை பாதுகாக்க டாங்கிகளையும் துணைக்கு அனுப்பியுள்ள மோடி அரசுக்கு ஒரு சல்யூட் Valgau nadu velga baratham.

    Jagadeesan

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.