கெஜ்ரிவாலின் ஐ.ஐ.டி டிகிரி தில்லு முல்லு! அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி படிப்பில் சேர்ந்ததே தில்லாலங்கடி வேலையால் தான் என்று எப்போதும் போல நமது துப்பறியும் சுப்ரமணிய ஸ்வாமி, அம்பலப் படுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, ஐ.ஐ.டி கராக்பூரில் பி.டெக் மெக்கானிகல் படித்த ஆக பெரும்பான்மை மாணவர்களின் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விவரம் இருக்கும். ஆனால் மிகச் சிலரின் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டும் இருக்காது.

அதில் ஒருவர் தான் நமது ‘தில்லுமுல்லு’ அர்விந்த் கெஜ்ரிவால்.

ஐ.ஐ.டி இல் கோட்டா இல்லை
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பிரபலமான பல்கலை கழகங்களில் ஐ.ஐ.டி முதன்மையானது.

இதில் பல லட்சம் மாணவர்கள் எழுதி, ஒரு சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் (மிமிஜி-யிணிணி) என்ற போட்டித் தேர்வின் மதிப்பெண் கொண்டு தான் அனுமதி உண்டு.

#‎குறுக்கு_வழி‬

அர்விந்த் கெஜ்ரிவாலின் தந்தை ஜிண்டால் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்தார். ஜின்டாலின் நிறுவனத் தலைவரும் ஐ.ஐ.டி கராக்பூர் பேராசிரியர்
ஜி.எஸ். சன்யால் அவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

ஐ.ஐ.டி காரக்பூரின் ‘ரகசிய’ கோட்டா
1951ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி கராக்பூர் மிகவும் பிரபலமான காரணத்தினால், 1965ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கான நுழைவு தேர்வு தொடங்கப்பட்டது.

அது தான் ஐ.ஐ.டி- ஜே.ஈ.ஈ நுழைத் தேர்வு! ஆனால் ஐ.ஐ.டி கராக்பூரில் வெளியே சொல்லப்படாத ஒரு ரகசிய கோட்டா ‘பின் பற்ற வந்தது’ 2005ம் ஆண்டு தான் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் வந்தவுடன் தான் இந்த ‘‘ரகசிய உள் ஒதுக்கீடு’’ அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்த ரகசிய இட ஒதுக்கீட்டில், கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர்கள், நிர்வாகிகள் இவர்களின் வாரிசுகளுக்கு, ஐ.ஐ.டியில் நிச்சயம், போட்டியின்றி இடம் உண்டு.

இவர்கள் பெயரளவில் இந்த பொது போட்டி தேர்வை எழுதினால் போதும் 12ம் வகுப்பில் 60% வாங்கி விட்டால் போதும்.
பிரபல நாளிதழில், ஒரு முன்னாள் ஐ.ஐ.டி காரக்பூர் பேராசிரியர் கொடுத்துள்ள பேட்டியில், அப்படி ‘ரகசிய இட ஒதுக்கீட்டில்’ இடம் பெற்ற மாணவர்களின், பொது போட்டி தேர்வின் மதிப்பெண்களையோ அல்லது அவர்களின் பொதுத் தேர்வு அட்டை எண்ணையோ வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளார்.

அதான் அர்விந்த் கெஜ்ரிவாலின் போட்டி தேர்வு எண்ணையே காணோமா …??
என்று கிண்டல் தொடங்கி விட்டது.

பிரதமர் மோடியின் சான்றிதழ் உண்மையானது என்று டெல்லி பல்கலைகழகம், சொல்லியும் வம்பு பண்ணித் திரிந்த கெஜ்ரிவாலுக்கு சரியான அடி கொடுத்துள்ளார் சாமி ….!!!

கெஜ்ரிவாலுக்கு முறையாக நிர்வாகம் பண்ணத் தெரியாது! பிடிக்காது! ‘‘சும்மா ‘டிராமா’ போடத் தான் பிடிக்கும்’’ பாவம் தில்லி மக்கள்…. என்று இண்டர்நெட் நக்கல் களை கட்டியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.