தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் சில துறைகளில் ஏற்றத்தையும், பல துறைகளில் ஏமாற்றத்தையுமே அளிக்கிறது.  தமிழ் வளர்ச்சிக்கும் போதிய நிதி இல்லை, தொழில் வளர்ச்சிக்கும் போதிய நிதி இல்லை.  சுகாதாரத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

தேசிய நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் மாநில அரசு, தமிழக நிதிகளை இணைப்பதற்கும், கிடப்பில் போடப்பட்டிருக்கும் பல நீர்நிலைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் பெரிய திட்டங்கள் எதுவும் திட்டமிடாதது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல சென்னையை சுற்றி உள்ள ஆறுகள் தூர்வாருவதற்கு ஒதுக்கப்பட்ட              154 கோடி ரூபாய் ஊழல் நடந்ததால் தான் சென்னை பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.  அதே போல 7 மாதமாகியும் உடைந்து கிடக்கும் கொசஸ்தலை ஆற்றில் பாலம் செப்பனிடப்படவில்லை.  இப்படி எத்தனையோ திட்டங்கள் விவசாயிகளுக்கு நீர் வழங்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தூய்மைதமிழகம் – திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.  ஆனால் கூவத்தை மட்டுமே சுத்தம் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய 105 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு சரியான திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை

பள்ளிக் கல்வித்துறைக்கு 24,000 கோடி என்று சொல்லியிருக்கிறார்கள்.  பல காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.  பள்ளிக்கட்டடங்கள் சரிசெய்வதற்கு 330 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். அதற்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் 4,400 கோடி செலவிப்படாமல் இருக்கிறது.  முதலீட்டாளர்கள் 2லட்;சம் கோடி முதலீடு என்று சொல்லப்பட்டது. ஓராண்டாகியும் இவை 23,0000 கோடிக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

5.5 லட்சம் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்கிறார்கள.; ஆனால் கணிணிக்கல்விக்காக மத்திய அரசு வழங்கிய 900 கோடி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

இயற்கை பேரழிவு 233 கோடி என்று சொல்லியிருக்கிறார்கள் – கடலுருக்கு மட்டும்                140 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் மழைவெள்ளம் அதிகமாக சென்னையில் பாதிக்கப்பட்டதற்கு காரணம் 154 கோடி ரூபாய் தூர் வார்;வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தியே வந்திருக்கிறது.

பள்ளிக்குழந்தைகளுக்கு பை, காலணி வாங்குவதற்கு 1,700 கோடி என்கிறார்கள் ஆனால்  9 லட்சம் பைகளுக்கும், 7 லட்சம் காலணிகளுக்கும் தலா 102 கோடி ஒதுக்கியும் அது இன்று முறைப்படுத்தப்படாமல் இந்த கல்வியாண்டில் பழைய பைகளே விநியோக்கிப்பட்டது என்றும், சரியான தொழில்நுட்பம் இல்லாத டெண்டர்களுக்கு மாற்றப்பட்டது என்ற செய்தியும், ஒதுக்கப்படும் நிதிகள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

30 கோயில்களில் அன்னதானம் விரிவுப்படுத்தப்படும் என்பது ஆறுதலைத் தந்தாலும் பல கோயில்களில் சொத்துகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், கோயில்களில் நுழைவுச்சீட்டு கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் 500 கடைகள்  மூடலில் 6,600 கோடி இழப்பு, ஆனால் அதை ஈடுகட்டுவதற்கும் புதிய வருமானத்தைப் பெருக்குவதற்கும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

கறவை மாடுகள் வாங்குவதற்கு 30,000த்திலிருந்து 35,000 என்று உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.  ஆனால் காங்கேயம் கறவை மாடுகளை பாதுகாக்க 23,000 கோடி மத்திய அரசு ஒதுக்கியதை தமிழக அரசு செலவழிக்கவில்லை.  அதே போல பாமாயிலுக்கு மானியம் கொடுக்கும் அரசு இங்குள்ள விவசாயிகளின் எண்ணெய் உற்பத்திக்கு இப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை.

ஆகமொத்தம் கடனே என்று சமர்பிக்கப்பட்ட பட்ஜெட்டின் கடன் அளவு 2.5 லட்சம் கோடி ரூபாய் எனவும், இழப்பிற்கு 40,000 கோடி எனவும் கூறுகிறது.  இரட்டை இலக்கு வளர்ச்சி என்கிறது பட்ஜெட்.  ஆனால் இரட்டை இலைக்கு வளர்ச்சி கொடுக்கும் பட்ஜெட்டாக மட்டுமே உள்ளது.  வரியில்லாத பட்ஜெட் என்று பிரகடனப்படுத்தப்படும் இந்த பட்ஜெட் சரியில்லாத பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது.      

நன்றி டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.