காஷ்மீரில் இப்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது. காஷ்மீரில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு பாகிஸ்தான்தான் முக்கிய காரணம்.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலும் அந்நாட்டின் தூண்டுதல் உள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட நாளை கருப்புதினமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தஉரிமையும் இல்லை. தனது தோல்விகளில் இருந்து மக்களின்கவனத்தை திசைதிருப்ப அந்நாடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்தியாவில் எங்குபயங்கரவாதம் தலை தூக்கினாலும், அது பாகிஸ்தானால் தூண்டப்படுவதாகவே உள்ளது.

காஷ்மீரில் வன்முறையா ளர்களைக் கலைக்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியவற்றையே பாதுகாப்புப்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், குண்டு காயத்தால் ஒருவர் உயிரிழந்ததாகவும், கண்ணீர்புகையால் பலருக்கு பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், காயம் அதிகமுள்ள தாகவும் தகவல் வந்துள்ளது. எனவே, பாதுகாப்பு படையினருக்கு மாற்று ஆயுதங்கள் வழங்குவதுகுறித்து ஆய்வுசெய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந் தோருக்கு ஆறுதலையும் மத்திய அரசுசார்பில் தெரிவிக்கிறேன். வன்முறையை கட்டுப்படுத்தும் போது அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது காஷ்மீரில் இந்த ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. பர்ஹான்வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை களில் பொதுமக்களில் 38 பேர் இறந்துள்ளனர். 2,180 பேர் காயமடை ந்துள்ளனர். இவர்களில் 2,055 பேர் மருத்துவ மனைகளில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். பாதுகாப்புப் படைவீரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,739 பேர் காயமடைந்துள்ளனர்.

 மதத்தின் பெயரால் காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. காஷ்மீர் இளைஞர்களும் நாட்டுப் பற்றுடையவர்கள்தான். அவர்களுக்கு சிலர் தவறாக வழிநடத்து கிறார்கள். இதனால் இந்தியா மீது தேவையற்ற வெறுப்புணர்வை அவர்கள் வளர்த்துக்கொள்கிறார்கள். மாவோயிஸ்டுகளால் வன்முறை நடைபெறும் பகுதிகளிலும் இதுபோன்ற வெறுப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா விரைவில் தில்லிவர இருக்கிறார். அவருடன் ஆலோசனை நடத்திய பிறகு காஷ்மீருக்கு அனைத்துக்கட்சிகள் அடங்கிய குழுவை அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும். காஷ்மீருக்குச் சென்று அங்குள்ள மக்களை நேரடியாகச்சந்தித்து அவர்களது பிரச்னைகளுக்குப் பேசி தீர்வுகாண வேண்டும் என்பதே எனது விருப்பம். நமது தேசத்துக்கு எதிராக சவால்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.