ஒரு பாகிஸ்தானி டிவி சேனல் விவாதம் பார்க்கக் கிடைத்தது. (யூ டியூபில் கொட்டிக் கிடக்கிறது). எதற்குத்தான் புலம்புவது என்றில்லாமல் எல்லாவற்றுக்கும் மோடி மோடி என்று புலம்புகிறார்கள்.

ஒபாமா பாகிஸ்தான் பின் லாடனை ஒளித்து வைத்த விவகாரத்தில் கடுமை காட்டிவிட்டார் என்று ஒரு பத்திரிக்கையாளர் புலம்பினார். இன்னொருவர் ஒபாமா போகிறார். அவரை விடுங்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு மோடியைப் பிடிக்காது. ஆனால் அவர் ஜெயிப்பார் என்று நம்பிக்கை இல்லை. ஜெயித்தாலும் பெரிதாக ஏதும் செய்யமுடியாது. டொனால்ட் டிரம்ப் சொல்வதைக் கேளுங்கள் என்கிறார். விடியோ காட்டுகிறார்கள்.

டிரம்ப் சொல்கிறார் “பின் லாடனைப் பிடிக்க உதவி செய்த டாக்டரை பாகிஸ்தானில் சிறை வைத்திருக்கிறார்கள். நான் ஜனாதிபதி ஆனதும் ஒரு ஃபோன் போட்டு அந்த டாக்டரை உடனே விடச் சொல்லுவேன். கேட்டாக வேண்டும். எவ்வளவு பணம் தருகிறோம் அவர்களுக்கு. கேட்பார்கள். இரண்டு நிமிடங்களில் டாக்டரை விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் நடப்பது வேறு. நட்பு என்ற பேச்செல்லாம் இல்லை. நமக்கு அவர்கள் நட்பெல்லாம் கிடையாது. யாருமே நட்பில்லை. இந்தியாவை கூட வைத்துக் கொண்டு பாகிஸ்தானையும் பிற பயங்கரவாதிகளையும் அடக்கி வைக்க வேண்டும்.” என்கிறார்.

”இந்த ஆள் வென்றால் நவாஸ் ஷரீஃபை மதித்துப் பேசுவாரா? மோடி என்றால் அமெரிக்காவில் அத்தனை பேரும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். மோடியோடு பேச, போட்டோ எடுக்க, கைகுலுக்க என்று அமெரிக்க அரசியல்வாதிகளே அலைகிறார்கள். நம் கதி என்ன?” என்று புலம்பி பேனசீர் புட்டோவைத் திட்டி, அவரைக் கொன்றவர்களைத் திட்டி, நவாஸ் ஷரீஃபைத் திட்டி, ஆர்மியையும் லேசாகத் திட்டி முடித்துக் கொண்டார்கள்.

அவனுக்குத் தெரிகிறது மோடி நமக்காக என்ன செய்கிறார் என்று. இங்கே இருந்து கொண்டு அவனிடம் வாங்கித் தின்பவர்களுக்கும் தெரிகிறது. அவன் பேச்சை அப்படியே எதிரொலிக்கிறார்கள். நம்மவர்களுக்கு மோடி விஷயத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.

நன்றி அருண் பிரபு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.