மழைக் காலம் தொடங்கியுள்ளதால், பல்வேறு நோய்கள் பரவலாம் , மக்கள் தங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்து கொள்ளக்கூடாது.

சமீபத்தில், தென்னாப்ரிக்காவுக்கு பயணம்செய்தேன். மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில், தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வாழ்ந்த இடம் ஆகியவற்றுக்கு சென்றது, எனக்கு ஒரு புனிதப்பயணமாக அமைந்தது.

நமது நாட்டில் பிரசவத்தின்போது தாய்சேய் மரணம் அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இதை நாம் தீவிரமாக கவனத்தில் கொண்டு தடுத்திட வேண்டும்.இதற்காக ‘தாய்மை பாதுகாப்பு சிறப்பு இயக்கம்’ ஒன்றை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. அதன்படி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதாரமையங்கள் ஆகியவற்றில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9–ந்தேதி அன்று இலவசமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதன்மூலம் ஆண்டுதோறும் 3 கோடி கர்ப்பிணிகள் பயன்அடைவார்கள்.

அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியாத மகப்பேறு நிபுணர்களும் கூட மாதத்தில் ஒரு நாளை கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டுகிறேன். எனது இந்த அழைப்புக்கு ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சாதகமான பதிலைதெரிவித்து இருக்கின்றனர். ஆனால், நமது நாடு மிகவும் பெரியது என்பதால் லட்சக்கணக்கான டாக்டர்களின் சேவை இதற்கு தேவைப்படுகிறது.


சிலகாலத்துக்கு முன்பு நாம் வறட்சியால் கவலைப் பட்டோம். இப்போது மழைபெய்வதால் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டோருக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் நெருக்கமாக இணைந்து அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றன

இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நம்முடைய அன்றாடவாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு, தொழில் நுட்ப ரீதியில் தீர்வுகாணப்பட வேண்டும்‘‘அன்றாடம் இதுபோன்ற நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இதற்கு புதுமையான தொழில்நுட்ப முறையில் நாம் தீர்வு காணவேண்டும். அடுத்த தலைமுறை கண்டுபிடிப் பாளர்களை நாம் தயார் செய்தால், நமது குழந்தைகளை அடல் கண்டு பிடிப்பு திட்டத்தில் இணைத்து விடமுடியும். இதனால்தான் அடல் கண்டுபிடிப்பு ஆய்வகங்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது’’.

‘‘இதுபோன்ற ஆய்வகங்களை அமைக்கும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். இதே அளவிலான தொகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வகங்களை பராமரிப்பதற்காக வழங்கப்படும். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் அடல் பராமரிப்பு மைய திட்டத்தின் கீழ் இணைக்கப்படும். இதற்காக மத்தியஅரசு ரூ.10 கோடியை ஒதுக்க திட்டமிட்டு இருக்கிறது’’


அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், இளைய தலைமுறையை சேர்ந்தமாணவர்கள் ஆராய்ச்சியிலும், புதுமையான, புதியவழிகளை கண்டுபிடிப்பதிலும் ஈடுபடவேண்டும். இதுதான், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.இவ்வாறு தொழில்நுட்பம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்கள் கவுரவிக்கப்படுவர்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும், நாட்டு மக்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்.வெற்றிதோல்வியை விட, போட்டியில் பங்கேற்பதுதான் முக்கியம். அந்த வகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு, நாட்டுமக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். இது அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக, நான் நாட்டு மக்களின் தபால்காரனாக செயல்படவும் தயாராக உள்ளேன்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மூன்றாவது முறையாக, சுதந்திரதின உரையை, வரும், 15ல், டில்லி செங்கோட்டை யில் நிகழ்த்த உள்ளேன். இந்த உரை என் உரையாகமட்டும் இருந்தால் போதாது. நாட்டு மக்களின் உரையாக இருக்க வேண்டும்.இந்த உரையில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்று மக்கள் தம் கருத்துக்களை, ஆலோசனைகளை எனக்கு தெரிவிக்கலாம்.

வரும், 8ம் தேதி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75வது ஆண்டாகும். இம்மாதம், நாட்டின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த இரண்டு நாட்களையும், தீபாவளிபோன்று, ஒரு தேசிய பண்டிகையாக, அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.

சுற்றுச் சூழல் பிரச்னை, பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு முக்கியதீர்வு, காடுவளர்ப்பு தான். சில இடங்களில், நில தேவைக்காக காடுகள் அழிக்கப்படும்போது, அதற்கு மாற்றாக வேறுஇடத்தில் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கான மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப் பட்டுள்ள, 40 ஆயிரம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு அளிக்கப்படும். காடுகள்வளர்ப்பு என்பதை, ஒரு மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மன் கி பாத்' எனும், ரேடியோ உரையில், ஒலிம்பிக் போட்டி, சுதந்திர தின உரை, காடுகள் வளர்ப்பு என, பல்வேறு விஷயங்கள் குறித்து, பிரதமர் மோடி நேற்று பேசியது.

One response to “அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் மாணவர்கள் ஆராய்ச்சியிலும், புது வழிகளை கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்”

  1. vmvenk says:

    ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு மாதம்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை

    நமது நாட்டில் பிரசவத்தின்போது தாய்சேய் மரணம் அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இதை நாம் தீவிரமாக கவனத்தில் கொண்டு தடுத்திட வேண்டும்.இதற்காக ‘தாய்மை பாதுகாப்பு சிறப்பு இயக்கம்’ ஒன்றை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. அதன்படி, அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரமையங்கள் ஆகியவற்றில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9–ந்தேதி அன்று இலவசமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதன்மூலம் ஆண்டுதோறும் 3 கோடி கர்ப்பிணிகள் பயன்அடைவார்கள்.

    நரேந்திர மோடி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.