சரக்குசேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றியதால், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி யுள்ளன என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகள் இந்திய அரசை பாராட்டி வருகின்றன. இந்நிலையில், சீன அரசுப்பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' நாளிதழில், இதுதொடர்பான கட்டுரை வெள்ளிக்கிழமை (ஆக.5) பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் பட்டதால், இந்தியப்பொருளாதாரம் மேம்பட வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் முதலீடுசெய்ய உலகநாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் நீடித்து வந்தன. அவற்றில் முக்கியமானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வெவ்வேறு வரிவிதிப்பு முறைகள்தான்.

இப்போது, அதற்குத் தீர்வுகாணும் விதமாக ஒரேசீரான வரி விதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி மசோதாவை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இத்தைகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டின் தொழில்முதலீடு அதிகரிக்கும்.

உலக நாடுகளை சேர்ந்த பலநிறுவனங்கள் இந்தியாவில் தொழில்தொடங்க இது வழிவகுக்கும். இந்தியஅரசின் இந்த நடவடிக்கையை சீனா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. தொழில் – வர்ததகத்தில் மேலும் அதிகளவில் அந்நாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட சீனா விரும்புகிறது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்விளைவாக இரண்டாவது முறையும் பிரதமர் பதவியை கைப்பற்ற மோடிக்கு வாய்ப்புள்ளது என்று அந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.