‘‘புதிய கல்விகொள்கையால் இடஒதுக்கீடு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது’’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக கூறினார்.

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. ஆனால், புதிய கல்விகொள்கையில் சமஸ்கிருதத்தை திணிப்பதாகவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள், குலக் கல்வி திணிக்கப் படுவதாகவும் பலமாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினரும் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவை காலை கூடியதும், புதிய கல்விகொள்கை குறித்து விவாதித்து இன்று அந்த பிரச்சினைக்கு முடிவுகாண வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்து பேசியதாவது:

கல்விதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மத்திய அரசு பழுதுபார்க்க வில்லை. குறிப்பாக இட ஒதுக்கீடு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது. மேலும், புதிய கல்விகொள்கை தொடர்பாக கருத்துகளையும் யோசனைகளையும் தான் மத்திய அரசு கேட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துதெரிவிக்க செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசமும் நீட்டிக்கப் பட்டுள்ளது

ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதாக கல்வி இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.