ராஜ்நாத்சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, விளம்பரகுழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்துள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமா தேர்தல்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிலமாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பரகுழு உள்ளிட்ட 17 வகையான குழுக்களின் பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்து அறிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விளம்பர குழுவிற்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கட்சியின் மேல்முறையீட்டை தயாரிக்கும் பணிக்குழு, பைக்ரேலி குழு, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் விளம்பரகுழு, தேர்தல் பிரச்சார குழுக்குளுக்கு, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின்கட்கரி, சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் அருண் சிங் தலைமையில் மன் கி பாத் குழு உள்பட பலர் பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.