பாஜக.,வின் தேசியத்தலைவர் அமித்ஷா ஜனவரி 17-ம் தேதி சென்னை வருகிறார். பாஜக.,வின் மாநில நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் எஸ்.குரு மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்புநிகழ்ச்சி ஜனவரி 17-ம் தேதியும், திருமணவிழா ஜனவரி 18-ம் தேதியும், ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்தவிழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா, மூத்த தலைவர் எல்கே.அத்வானி, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் வர உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாயத் துக்கும் அமித்ஷா வர உள்ளார். அங்கு பாஜக.,வின் மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஸ்ரீ ரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக.,வும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தலை பாஜக பார்க்கிறது என்பது குறிப்பிடத் தக்கது

Leave a Reply