இந்தியாவில் "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க பிரான்ஸ் முன் வந்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்து ஆகியோர் முன்னிலையில் பாரீஸில் வெள்ளிக் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்துடன், அதிவேக ரயில்கள், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட மேலும் 16 ஒப்பந்தங்களும் இந்தியா, பிரான்ஸ் இடையே கையெழுத்தாகின.

இதுதொடர்பாக, இருநாட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "இந்தியாவில் ரயில்வேயை நவீனப்படுத்துவது, நவீன நகரங்களை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல இருநாட்டுத் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்' என கூறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேதுறை மற்றும் பிரான்ஸ் தேசிய ரயில்வே இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் படி, சண்டீகர் – தில்லி இடையே தற்போது 79 கிமீ. வேகத்தில் இயக்கப்படும் சதாப்தி விரைவுரயிலின் வேகத்தை 200 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் ஈடுபடும். இதில் இருநாடுகளின் சார்பிலும் நிதிப் பங்களிப்பு இருக்கும்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்பாலா, லூதி யானா ரயில் நிலையங்களைச் சீரமைப்பதற்கும் பிரான்ஸ் உதவி புரியும்.

இந்திய அரசு முன்னெடுக்கும் "நவீன நகரங்கள்' திட்டத்துக்கு உதவி செய்யவும் பிரான்ஸ் இசைவு தெரிவித்துள்ளது."இதன்படி, மத்திய அரசு அடையாளம் காணும் பகுதிகளை நவீன நகரங்களாக மாற்ற பிரான்ஸ் ஒத்துழைப்பு அளிக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் பிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (சி.என்.இ.எஸ்.) இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன்படி, விண்வெளி அறிவியல் மற்றும் கோள்களின் ஆய்வு, செயற்கைக் கோள்களை இயக்குவது, விண்வெளி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, தகவல்சேகரிப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவும், பிரான்ஸூம் இணைந்து செயல்படும். மேலும், செவ்வாய்கிரக ஆராய்ச்சியிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள திட்டம் மற்றும் கட்டடக் கலை நிறுவனத்துக்கும், பாரீஸில் உள்ள தேசிய கட்டடக் கலை நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் படி, புவியியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது, நகர மற்றும் கிராமப்புற கட்டுமானங்களில் அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது, கட்டட மேலாண்மை ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன.

பிரான்ஸில் உள்ளதை போன்று இந்தியதேசிய விளையாட்டு நிறுவனத்தை அமைத்து கொடுக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரி சக்தி: சூரிய மின் சக்தி, காற்றாலை, உயிரி – எரிவாயு, அலை ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறைகளை ஊக்குவிக்கவும், தொழில் நுட்ப உதவிகளைப் பரிமாறி கொள்ளவும், இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவில் தங்கியிருக்கும் பிரான்ஸ் மாணவர்கள், பிரான்ஸில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்களில் தலா 250 பேருக்கு ஓராண்டுக்கான விசாவை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது என்று இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.இந்திய ஆயுர்வேத மருத்துவ கழகமான "ஆயுஷ்' சார்பில் பிரான்ஸில் கருத்தரங்குகள், மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதேபோல், கலாசார வளர்ச்சியில் இணைந்து செயல்படுவது, ஜெய் தாப்பூர் அணுமின் நிலையத் திட்டத்துக்கு பிரான்ஸ் நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே மொத்தம்

இதேபோல், கலாசார வளர்ச்சியில் இணைந்து செயல்படுவது, ஜெய் தாப்பூர் அணுமின் நிலையத் திட்டத்துக்கு பிரான்ஸ் நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே மொத்தம் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தாகின.

Tags:

Leave a Reply