அன்னா ஹஸாரே போன்றோரின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் மத்திய_அரசு லோக்பால் மசோதாவை மாற்றியமைத்துள்ளது . பிரதமர், நீதிதுறைக்கு மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கபட்டிருக்கிறது . உயர் அரசு அதிகாரிகளுக்கும் இந்த சட்டதிலிருந்து விலக்கு அளிக்கபடுகிறது.ஒருவர் மீது ஊழல் நடந்து 7 ஆண்டுகளுக்குப்

பின்னர் புகார் கொடுத்தால் லோக்பால் அமைப்பு அதை விசாரிக்காது, ஏற்காது.

மத்திய அமைச்சரவை லோக்பால் மசோதாவை பரிசீலனை செய்து அதற்கு ஒப்புதல் தந்துள்ளது . இதைதொடர்ந்து இந்த மசோதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யபடும் என்று எதிர்பார்க்க படுகிறது

சிந்திக்க ; ஒருவேளை இப்போது பிரதமாராக இருப்பவர் திரும்பவும் (5 ஆண்டுகள் கழித்து) இரண்டாவது முறையாக பிரதமரானால் முதல முறை பதவியிலிருந்த 1வது அல்லது 2வது வருட_ஊழலை எப்படி 7 வருடத்திற்குள் விசாரிப்பது??? அப்ப கொலைசெய்து 7 ஆண்டுகளாகி விட்டால் விசாரணை_கிடையாதா???

இப்போது இருக்கும் ஆட்சியாளர்களின் ஒரே இலக்கு எந்த திட்டத்தை கொண்டுவந்தால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பது மட்டுமே எனவேதான் இவ்வளவு ஊழல்கள். மக்கள் இப்போதிருக்கும் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிகொடுத்த காங்கிரஸ் என தப்பாக நினைத்து ஒட்போட்டு கொண்டிருகிறார்கள். இது மிகபெரிய தவறு.

இவர்கள் காங்கிரசின் பெயரை வைத்துகொண்டு நாட்டை சூறைஆடி விடுவார்கள் என காந்தி பயந்து சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ்ஐ கலைக்கசொன்னார். காங்கிரஸ் அன்று காந்தி சொன்னதை செய்யவில்லை..அனால் அவர் எதற்கு பயந்தாரோ அதை கன கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறது என்ன ஒரு தீர்கதரிசனம் காந்திஜிக்கு,எவ்வளவு நம்பிக்கை இவர்களின் மீது. காந்தி பெயரை சேர்த்து_கொண்டதால் காந்திஜிக்கும் இவர்களுக்கும் ஒருசம்பந்தமும் கிடையாது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.