டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்கஇலாகா குடோனில் வைத்திருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள 80 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

 

டெல்லி உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் சுங்க இலாகா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று பிடிபட்ட தங்ககட்டிகள் மற்றும் நகைகள் சுங்க இலாகாவின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுஇருக்கும்.

இந்த கிடங்கில் இருந்த தங்கம் கடந்த சிலஆண்டுகளாக திருடப்பட்டு வருகிறது. தங்க கட்டிகள் மற்றும் நகைகளை திருடிவிட்டு அதற்குபதிலாக தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தை அதே இடத்தில் வைத்துவிடுகிறார்கள்.

 

கடந்த ஆண்டு  சுங்க இலாகா அதிகாரிகள் இந்தகுடோனில் இருந்த ரூ.22.92 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக ஒரு புகார் கொடுத்திருந்தனர். இதேபோல 2014–ம் ஆண்டும் பலமுறை டெல்லி போலீசில் புகார்கள் கூறப்பட்டன.

 

போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுபோல புகார் செய்யப்பட்ட 1.27 கிலோ தங்க கட்டிகள், மற்றும் தங்கசங்கிலிகள், வளையல்கள் காணாமல்போன வழக்கில் கோர்ட்டு சுங்க இலாகா குடோனை சீல் வைக்க உத்தரவிட்டது.

சுங்க இலாகா அதிகாரிகளின் விசாரணை குழுவினர் விசாரணைக்காக அந்த குடோனை திறந்து ஆய்வுசெய்தனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியே தெரியவந்தது. கடந்த 4 ஆண்டுகளாக விமானத்தில் கடத்திவரப்பட்டு பிடிபட்ட அனைத்துதங்கமும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக தங்கமுலாம் பூசப்பட்ட உலோகங்கள் தான் அந்த குடோனில் இருந்தது தெரியவந்தது.

2012–ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம்வரை பிடிபட்ட 80 கிலோவுக்கும் அதிகமான தங்க கட்டிகள் மற்றும் நகைகள் திருடப்பட்டு அதற்குபதிலாக போலியான தங்கம் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய நிலவரப்படி அவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி. கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து சம்பவங்களிலும் பிடிபட்ட தங்கம் முழுவதுமே மாயமாகி உள்ளது.

இந்த திருட்டு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந் திருப்பதால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைசெய்ய முடிவு எடுத்துள்ளதுதாக அதிகாரிகள் கூறினர்.

கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள சுங்க இலாகாவின் கிடங்கில் இருந்த தங்கம் எப்படி போலிதங்கமாக மாற்றப்பட்டது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.யிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் கண்காணிப்புபிரிவும் சந்தேகத்துக்கு இடமான சில சுங்கஇலாகா அதிகாரிகளிடம் தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.