விநாயகர் சதுர்த்திவிழா வரும் 9ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் முதல் கட்டமாக 1,705 இடங்களில் விநாயகர்சிலைகள் வைக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. போலீஸ் அனுமதியுடன் இந்தசிலைகள் வைக்கப்பட உள்ளது. இது தவிர 5
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறியசிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளன. ஒருவாரத்துக்கு பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் தலைமையில் சிலைகள் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
இந்து அமைப்புகளின் சார்பில் வரும் 14, 16, 22ம் தேதிகளில் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்தது. விநாயகர்சதுர்த்தி தினத்தில் இருந்து ஊர்வலம் முடியும்வரை தினமும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள்.
வட சென்னையில் குறிப்பிட்ட இடங்களில்மட்டுமே விநாயகர் சிலைகள்வைக்க போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு வைக்கமுடியாதவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சிலைவைக்க விரும்புவதால் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.