முன்னாள்_அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவின்படி சேலம் நகர குற்றபிரிவு காவல் நிலையத்தில், காவல் துறை_விசாரணையிலிறுந்தபோது, அவரது ஆதரவாளர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.அப்போது, எதுவும் செய்யாமல் காவல் துறையினர் அத்தனை சம்பவங்களையும் அமைதியாக விடியோவில் பதிவுசெய்து வைத்துகொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் , கடைகளை மூடசொன்னவர்கள், சாலையில் போகும் அப்பாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் , காவல்துறையினர், மற்றும் அதிமுக,வினரை கெட்ட வார்த்தைகளால் திட்டியவர்கள், நீதிமன்றத்தின் கண்ணாடிகலை உடைத்தவர்கள் என்று அத்தனை பேரையும் விடியோவில் பதிவுசெய்து வைத்துகொண்டனர்.

இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாகி வீட்டுகு சென்ற பிறகு சத்தம் இல்லாமல் நேற்று இரவு ஆட்டம்போட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற போலிசார், வீட்டில் படுத்திருந்தவர்களை எல்லாம் தட்டி எழுப்பி தூக்கிகொண்டு வந்து வழக்குபோட்டு உள்ளே அனுப்பியுள்ளார்கள்.

Tags:

Leave a Reply