சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியதேசிய பொறியியல் அகாடமி சார்பில் 3 நாட்கள் ‘பொறியியல் கல்வி 2020 மற்றும் பொலிவுறு நகரம்’ (ஸ்மார்ட் சிட்டி) என்ற தலைப்பில் பொறியாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் உள்ள இந்தியதொழில் நுட்பக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

 

பொலிவுறு நகரம் திட்டத்துக்காக மத்தியஅரசு ரூ.48 ஆயிரம்கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 100 நகரங்கள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு நகரங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி 20 பொலிவுறுநகரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.

தற்போது மேலும் 40 பொலிவுறு நகரங்கள் அடங்கியபட்டியலை மத்திய அரசு இந்தமாத இறுதியில் அறிவிக்க உள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள நகரங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்நாடு ஏற்கனவே சிறந்தமுறையில் செயல்பட்டு வருவதால் 2-வது பட்டியலில் தமிழக நகரங்களின் பெயர்கள் இருக்க வாய்ப்புள்ளது.

தேசிய பாரம்பரிய நகரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் வேளாங் கண்ணி, காஞ்சீபுரம் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கத்தையும் சேர்க்க முதல்அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நகர்புற மேம்பாட்டுக்காக 14-வது நிதிக் குழு ரூ.87 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. அதேபோல் 33 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கு ரூ.78 ஆயிரத்து 200 கோடி அனுமதி தரப்பட்டுள்ளது. நாம் நாட்டின் இயற்கையை போற்றவும், கலாசாரத்தை மறக்காமல் இருப்பதற்காக பொலிவுறு நகரதிட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். மத்திய அரசு நிதியில் இருந்து மாநில அரசுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ்கட்சியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒதுக்கிய நிதி, மோடி அரசில் கடந்த 2 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.