நான் கிராமப்புறத்தில் இருந்து வந்து விளையாட்டில் பங்கேற்றவன். நான் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்றபோது, எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என கோவையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

ஈஷா ஊரக புத்தாக்கத் திட் டத்தின் கீழ் கிராமோத் சவம் என்ற பெயரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புற மக்களிடத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும்வகையில் கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு, 12-வது ஆண்டாக, நடப்புஆண்டில், கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் 880 கிராமங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10,360 பேர் பங்கேற்றனர். மாவட்டளவில் தேர்வான குழுக்களுக்கு இறுதிச்சுற்று போட்டிகள், கோவை கொடீசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றன.

ஈஷாவின் கிராமோத்சவம் நிறைவுவிழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் வெற்றிபெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கினர்.

விழாவில், மத்திய அமைச்சர் பேசியதாவது: குழுவாக சேர்ந்து விளையாடும்போது, ஒருவருக்கு ஒருவர் ஊக்கப் படுத்திக் கொள்வதன் மூலம் நட்புவளரும். கிராமப்புற மக்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். நான் கிராமப்புறத்தில் இருந்து வந்து விளையாட்டில் பங்கேற்றவன். நான் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்றபோது, எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. பயிற்சியாளர்கள்கூட கிடையாது.

எனது திறமையை நம்பியே போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றேன். ஆனால், வெற்றிக்கு பின்னர் எனக்கு பலதரப்பில் இருந் தும் ஆதரவு கிடைத்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்க தொடங்கியவுடன் போட்டிகளில் தோல்வி அடையத்தொடங்கினேன். எவ்வித ஆதரவும் இல்லாமல் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெறுவதுதான் உண்மையான வெற்றி.

விளையாட்டில் பயிற்சியாளரால் வெற்றிக்கான பாதையைத்தான் காட்டமுடியும். போட்டியில் வெற்றி பெறுபவனை மட்டுமே உண்மையான விளையாட்டு வீரன் என கருதமுடியாது. திறன் குறைவாக இருந்தும் வெற்றிக்காக இறுதிவரை போராடி தோல்வியை அடைபவனே சிறந்தவிளையாட்டு வீரன் என்றார்.

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசும்போது, “விளையாட்டுமூலம் மட்டுமே உடல்தகுதியை பெற முடியும். விளையாட்டில் பங்கேற்று வெற்றி, தோல்வி காண்பதுமட்டுமே இலக்கு அல்ல. அதற்காக தயாராவது கூட ஒரு திறன்தான். விளையாட்டு என்பது ஒருசிறந்த கற்றல்முறை. நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டு” என்றார்

Leave a Reply