கடந்தவாரம் சீனாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, தென்கிழக்கு ஆசியாவில் ஒருநாடு மட்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, பயங்கரவாதத்தை பரப்பிவருவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிபேசினார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவுதருவோரை தனிப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2008 ம் ஆண்டு நடந்த மும்பைதாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், மும்பைதாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவேண்டும். பயங்கரதத்தை வேரறுக்கும் நடவடிக்கையில் பாக்., இறங்காவிட்டால், உலகரங்கில் இருந்து தனிமைப்படுத்தப் படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

 

இந்தியா மற்றும் அமெரிக்காவின் அடுத்தடுத்த எச்சரிக்கை மற்றும் அழுத்தத்திற்கு அடிபணிந்த பாகிஸ்தான், மும்பைதாக்குதல் வழக்கு குற்றவாளிகளான லக்வி உள்ளிட்ட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் எதிரொலியாக பாக்., கோர்ட் இந்தநோட்டீசை அனுப்பி உள்ளது. இதனால் மும்பை தாக்குதல் வழக்கில் விரைவில் முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply