பொற்றாமரை தேசிய இலக்கிய அமைப்பின் ஆண்டுவிழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் அமைப்பின் நிறுவன தலைவர் இல. கணேசன் தலைமை உரையில்கங்கை தேச ஒற்றுமையின் சின்னம்என்பதனை விளக்கினார். அதனை ஒட்டி, விஜயபாரதம் சார்பாக ஜம்புநாதன், இல. கணேசனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்உரையாடலிலிருந்து சில துளிகள்:

 

நம் நாட்டில் எத்தனையோ நதிகள் பாய்கின்றன – அப்படி இருக்க கங்கைக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு?

நம்முடைய கண்ணோட்டத்தில் பாரதநாடு என்பது வெறும் கல் அல்ல மண்அல்ல. இது நெடுங்காலமாய் ரிஷிகளாலும் தபஸ்விகளாலும் பண்படுத்தப்பட்ட மாந்தர்கள் வாழ்ந்து வளர்த்துவரும் கலாசாரம். ரிஷிகள் உண்மையை தரிசித்தவர்கள் – மந்திர திருஷ்ட்டா. அவர்களால் இயற்றப்பட்டவை இதிகாசங்களும் புராணங்களும். இவற்றிலிருந்து நாம் பகீரதன் தன் முன்னோர்களைச் சாபத்தில் இருந்து விடுவிக்க எவ்வாறு பெரு முயற்சி எடுத்து கங்கையை விண்ணுலகில் இருந்து மண்ணிற்கு கொணர்ந்தான் என்பதனை அறிகிறோம்.

இன்றுகூட நம்முடைய மாநிலத்தையே எடுத்துக்கொண்டால் கூட தன்னைப் பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்பவர்களும் ‘கங்கைத்தாய், காவேரித்தாய்’ என்று மரியாதையாகத் தான் உரைக்கின்றனர். அவ்வாறு இந்த நாட்டின் ஆன்மிக உணர்வுடன் இரண்டறக் கலந்தது ஒன்றுதான் கங்கை.

கங்கையை தேச ஒற்றுமையின் சின்னம் என்பது எப்படிபொருத்தமாகும்?

பாரத நாட்டின் எந்த மூலையில் ஒருவர் எந்த புனித சடங்கினை தொடங்கும்போதும் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி இந்த தீர்த்த பாத்திரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சிந்து, என்று தொடங்கி காவேரி ஈறாக எல்லா நதிகளும் வந்து நிறைந்து (கங்கே ச யமுனே ஸ்சைவ கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதே, சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம் குறு) இந்த நீருப் புனிதமாக்குக என்ற மந்திரத்தை உச்சரிக்கிறார். இது வழி வழியாக உள்ள பண்பாடு.

கங்கைகொண்ட சோழபுரம், கங்கை கொண்டான், தஞ்சாவூரில் உள்ள சிவகங்கைக்குளம், சிவகங்கைநகரம், பேட்டைக்கு பேட்டை உள்ள கங்கைஅம்மன் கோயில்கள் என்று இவை எல்லாம் வடக்கே பாயும் கங்கை நம்மவர்களையும் எவ்வாறு ஈர்த்துக் கட்டிப் போட்டுள்ளாள் என்பதனை விளக்குகின்றன.

அதெல்லாம் விடுங்கள். எத்தனையோ தொலைக்காட்சிகள் இருக்கிறார்களே, அவர்களுக்கு எல்லாம் ஒருவேண்டுகோள் விடுக்கிறேன்: ஏதாவது ஒரு கிராமத்தில் உள்ள ஒரு மூதாட்டியிடம் ‘உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கும் ஊர் என்று உண்டா, பாட்டி?’ என்று கேட்டுப் பாருங்கள்:  என்ன பாரிஸுக்கு போகவேண்டும், ஸிட்னிக்கு போகவேண்டும் என்றா சொல்வார்கள்? அந்த பாட்டி ‘காசிக்கு போகவேணும், கங்கையில் குளிக்க வேணும்’ என்றுதான் கூறுவாள்.

தமிழ் இலக்கியத்தில் கங்கையைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உண்டா?

முதல் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக நாம் போற்றுவது சிவபெருமானைத் தானே? அந்த சிவபெருமானின் தலையில் நீங்க  முடியாத இடத்தைப் பெற்றவள் கங்கை அன்னை.  கங்காதரன் என்பது அவருக்கு உண்டான பல பெயர்களுள் ஒன்று.

கண்ணகிக்கு கோயில் கட்ட இமயமலையில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டி கனகவிஜயர்கள் சுமந்து வந்தார்கள் என்கிறோம். இந்த வரலாற்று நிகழ்வினை நம்முடைய பண்டை இலக்கியம் பதிற்றுப்பத்து எப்படிவிளக்குகிறது பாருங்கள்:

கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்காண விலக்கானாம்elaganesan

கணையில் போகி ஆரிய அண்ணலை மீட்டிப் பேரிசை

இன்பம் அருவி கங்கை பண்ணி.. ”

பாண்டிய நாட்டு வியாபாரிகள் பல வெளிநாடுகளுக்கும் பயணித்து திரட்டி வந்த செல்வம் பரந்து விரிந்திருந்த காட்சியினை  கங்கை கடலில் கலப்பதை போலிருந்தது என்று வர்ணித்துள்ளது ‘மதுரைக்காஞ்சி’.

ராஜேந்திரசோழன் கங்கைகொண்ட சோழபுரம் ஏரிக்கு கங்கையில் இருந்து நீர்கொணர்ந்தான். அப்படி கொண்டுவரும்போது தானே தமிழகத்தின் எல்லை வரை சென்று எதிர்கொண்டு அந்த நீரினை மரியாதையாகப் பெற்றுக்கொண்டு எடுத்து வந்தான் என்று வரலாறு பகரும்.

 கங்கை நீரை தபால் அலுவலகங்களில் விற்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் அதனை வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் ஒரு நாவலாசிரியர் என்னுடைய நண்பர். அவர் தினமும் தன் வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்பவர். முன்னர் ஒருமுறை அவருக்கு கங்கை நீர் அவசரமாக தேவைப்பட்ட போது என்னை அணுக, நானும்  மூலமாக ஏற்பாடு செய்ய முடிந்தது. அரசாங்கம் வெளியிட்ட இந்த அறிவிப்பிற்கு பிறகு, நான் அவருக்கு தொலைபேசியில் மோடி அரசினால் உங்களுக்கு இனிமேல் எளிதாக கங்கை நீர் கிடைக்கும்” என்றேன். அவரும் மனப்பூர்வமாக பாராட்டினார்.

அதேபோல ஹிந்துவீட்டில்ஒருவர் மரணம் அடைந்தால் கங்கை நீர்அவருடைய இறுதி வேளையிலும் சடங்கிலும் இடம்பெறுகிறது.

அரசாங்கம் எப்படி தண்ணீர் விற்பனையில் ஈடுபடலாம் என்று சிலர் எதிர்க்கின்றனரே?

நம்முடைய நாட்டின் ஒருமையை உணர்த்தும் எல்லாச் சின்னங்களையும் எதிர்க்கின்றவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? போன மாதம் சமஸ்க்ருதம், இந்த மாதம் கங்கை. அவ்வளவுதான்.

அரசாங்கமே எப்படி விற்பனையில் ஈடுபடலாம் என்பவர்களுக்கு ஒருவார்த்தை கங்கைத் தண்ணீர் விற்பனை ஒன்றும் தவறல்ல.. ‘தண்ணி’ வியாபாரம் தான் தவறு.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.