அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் டிஜிட்டல்முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடர்பான விழிப்பு ணர்வு மாநாடு, டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல்முறையில் வழங்குவதற்காக, “டிஜிட்டல் இந்தியா’ பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.
முதலீட்டாளர்களின் நிதிவளங்களை பாதுகாக்கும் வகையில், நிதிசார்ந்த பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், கல்வி சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தமுறையில், புதிய கல்வி சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்றசான்றிதழ் களையும் இணையத்தில் பதிவேற்றி கொள்ளலாம். அவர்களது விவரப்பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றி தழ்களைப் பெறுவதற்காக பல்கலைக் கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.