இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காய மடைந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தீவிரவாதிகள் தாக்குதல்குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு இந்தசந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்தூறை மந்திரி மனோகர் பாரிக்கர், நிதிமந்திரி அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பைதொடர்ப்ந்து, பிரதமர் மோடி நேற்று மாலை ராஷ்டிரபதி பவன் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.

Leave a Reply