கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா அடுத்துள்ள நிம்மலூருவில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) நிறுவனத்தின், ராணுவத்தேவைகளுக்கான கண்காணிப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட மத்திய தகவல்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர்தான் நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கிச்செல்கிறது. பிரதமரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுபவர்கள். மாநில பிரிவினையால் பெருநஷ்டம் அடைந்துள்ள ஆந்திராவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவரவே இங்கு பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில், ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், இரவு நேரத்தில் கூட சுமார் 3 கிமீ தூரத்தை கண்காணிக்க உதவும் லென்ஸ் தயாரிக்கப்பட உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களில் 87 சதவீதம் நாட்டின் பாதுக்காப்புக்கு தொடர்புடையதாகும்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்துமட்டுமே வேண்டுமென நான் உட்பட பலர் ஆசைப் பட்டது உண்மை. ஆனால், ஆந்திராவின் 28 கோரிக்கைகளில் சிறப்பு அந்தஸ்தைத்தவிர, மற்ற 27 கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடுமிகவும் பலவீனமடைந்து விட்டது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.