நாடுமுழுவதும் 5.5 லட்சம் ரேஷன்கடைகளில் (பொது விநியோக கடைகள்) (பிடிஎஸ்) வங்கிச்சேவை அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் ரேஷன்கடைகளில் வங்கி சேவைகளை கொண்டுவர முயற்சிசெய்து வருகிறோம். இதன்மூலம் ரேஷன் கடைகளில் வங்கிகணக்கை செயல்படுத்தி கொள்ளமுடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இந்ததிட்டத்தில் வங்கி முகவர்களாக ரேஷன்கடைகள் செயல்படும். இந்ததிட்டத்தை முதல் கட்டமாக 55 ஆயிரம் கடைகளில் விரைவில் கொண்டுவர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தற்போது 1.5 லட்சம் ரேஷன்கடைகள் இயந்திரங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பயனாளிகளின் விவரங்களை அறிந்துகொண்டு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனுடன் ஆதார் விவரங்களை இணைத்து அதை மையத்துடன் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கு எளிதான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்பாடு தேவைப்படும். இந்த இயந்திரத்தின் மூலமே வங்கி அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ள முடியும் என்று அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவில் அஞ்சலகங்களைவிட ரேஷன் கடைகள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு ஆயிரம் மக்கள்கொண்ட கிராமத்திற்கும் ரேஷன் கடைகள் உள்ளன. அதனால் இந்ததிட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் 55 ஆயிரம் ரேஷன்கடைகளில் இந்த திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply