தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக, திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்து ஹிந்து இயக்க நிர்வாகிகளின் மீதான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வெவ்வேறு இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்தாலும், அவர்களை கொலை செய்யும் விதம் பெரும்பாலும் ஒரே பாணியில், இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் அமைப்பு சார்ந்த பணியினை மேற்கொண்டு வருபவர்களை திட்டமிட்ட ரீதியில் இலக்கு வைத்து ஒழித்து கட்டுவது கண்கூடு.

கொலைகளை செய்தவர்களை கைது செய்ததாக காவல் துறை கூறினாலும், அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தாமதமாவதோடு, வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்வதற்கு காரணம் என்ன? இந்த சங்கிலி தொடர் போன்ற ஒரே மாதிரியான படுகொலைகளின் பின்னணி குறித்து, அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து இது வரை தமிழக காவல் துறை நடவடிக்கைகள் எடுத்துள்ளது குறித்து விவரங்கள் இல்லை. மேலும், ஒவ்வொரு கொலைகள் நடக்கும் போதும், தனிப்பட்ட பகை காரணமா என்ற கோணத்தில் ஆராய்வதாக குறிப்புகள் சொன்னாலும், பின்னர் சந்தேகத்திற்கிடமாக கருதப்பட்டு கைதிகளில் முரண்பாடுகள் தென்படுகிறது. மேலும், கடந்த சில வருடங்களாக சில அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அடைமொழியோடு செயல்படும் சில தீய சக்திகள், பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளையும், தேச துரோகிகளையும் சாதி அடையாளம் கொண்டு ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் பெருகி வரும் நிலையில், ஹிந்து இயக்க நிர்வாகிகள் படுகொலை செய்யப்படும் போது வாய் மூடி மவுனமாக இருப்பது, அந்த அரசியல் கட்சிகளின், தீய சக்திகளின் 'சாதி' அடையாள, வாக்கு வெறியை மட்டுமே உணர்த்துகிறது.

சாதிகளை ஒன்றிணைக்க மறுத்து சாதி ரீதியாக மக்களை பிரிக்கும் இவர்களின் வஞ்சகத்தை மக்கள் உணர வேண்டும் . நாம் இதை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும். இந்த தீய சக்திகளின் மவுனம் தான், பதவி வெறி தான், இந்த கொலைகளுக்கு தூண்டு கோலாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இரு மதங்களுக்கிடையே இருக்கக்கூடிய பதட்டத்தை, மாற்று கருத்துக்களை, பெரும்பான்மை மதத்திற்கு எதிராகவும், சிறுபான்மை மதத்திற்கு ஆதரவாகவும் பேசி, ஊதி ஊதி பெரிதாக்குவது திராவிட கட்சிகளும், சாதியின் பெயரால் அரசியல் செய்யும் சில அமைப்புகளும், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பிணந்தின்னி கழுகுகள் போல் செயல்பட்டு கொண்டிருக்கும் 'முற்போக்கு' என்ற அடைமொழியோடு திரிந்து கொண்டிருக்கும் சில தீயசக்திகள் தான் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கு நாம் முயல வேண்டும். அதோடு கூட அந்தந்த பகுதியில் சமூக விரோத தீய சக்திகளின் நடவடிக்கைகளையும் நாம் கவனத்தில் கொண்டு, நம் அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்து செல்வது அவசியம்.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.