காவேரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலை குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி யையும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியையும்  மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் சந்தித்து விளக்குகிறார்.
 
காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்.4 தேதிக்குள் அமைக்கவேண்டும் என்றும் முந்தைய உத்தரவை மறு ஆய்வுக்கு உள்படுத்தி அதைத் திரும்பப்பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் கள ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என பிறப்பித்த உத்தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டும்' எனக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை மனு தாக்கல்செய்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக பாஜகவின் முகநூல் (பேஸ்புக்) பகுதியில், காவேரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலையை குறித்து நாளை பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியையும் சந்திப்பார் விளக்குவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், வரும் 8,9-ஆம் தேதிகளில் தமிழக பாஜக-வின் முக்கிய தலைவர் களோடு பிரதமரை சந்திக்க திட்டமிட்டு ள்ளதாகவும், தமிழக பாஜக.,வை பொறுத்த வரை காவேரி நதி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து கிடைத்திட மோடியை அவர்கள்வேண்டிய உதவிகளை செய்வார் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply