பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல்நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அளித்தது. இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.

ஆனால், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடை பெறவில்லை என்றும் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மட்டுமே நடைபெற்றதாகவும் சமாளித்து வருகிறது.

தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலானோர் சந்தேகம் வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம்கேட்டார் கேஜ்ரிவால். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் வீரேந்திர குப்தா, போலி கவுரவத்திற்காக பாகிஸ்தான் தாக்குதல் நடைபெற வில்லை என்று கூறிவருவதாக தெரிவித்தார்.
 
பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா கூறுகையில், ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்? இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானசெயல் அல்லவா. மும்பை தீவிரவாத தாக்குதல், பதன்கோட் தாக்குதல், யூரி தாக்குதல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர் புள்ளதாக ஆதாரங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பதிலுக்கு எதுவுமே நடக்கவில்லை. எனவேதான், இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி யுள்ளது என்றார். உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் அகிர் கூறுகையில், ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை பிரதமரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. அதை அம்பலப் படுத்துவதா, வேண்டாமா என்பதை பிரதமர் தான் முடிவுசெய்வார் என்றார்.

Leave a Reply