முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும் என்று அருண்ஜேட்லி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம்தேதி உடல் நல குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 21 நாட்களாக சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்நிலையில், அவர் விரைவில் பூரணகுணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என்று டிவிட்டரில் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் நேரில் சென்று அருண் ஜேட்லி, அமித்ஷா ஆகியோர் இன்று விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply