பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதியின்படி ஜம்முவில் ஐஐஎம் கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்தவும் மக்களின் மேம்பாட்டுக்கும் சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன்படி பல்வேறு மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் அடுத்தக் கட்டமாக ஜம்முவில் நாட்டின் உயர்க்கல்வி நிறுவனமான ஐஐஎம் கல்வி நிறுவனத்தை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.

நடப்பு கல்வி ஆண்டு முதலே (2016-17) ஜம்முவில் ஐஐஎம் கல்விநிறுவனம் செயல்பட தொடங்கும். அதற்காக ஜம்முவில் உள்ள அரசுபொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் ஐஐஎம் கல்வி நிறுவனம் தற்காலிகமாக செயல்படத் தொடங்கும். விரைவில் ஐஐஎம் நிறுவனத்துக்கு புதியவளாகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவில் தற்காலிகமாக செயல்படும் ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு ரூ.61.90 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நிதி 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை 4 ஆண்டுகளுக்கு செலவிடப்படும். தற்போது முதலாண்டு முதுநிலையில் (பிஜிடிபி) 54 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். படிப்படியாக 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட உள்ளது. காஷ்மீரில் நிரந்தர ஐஐஎம் வளாகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply