வரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

காவிரி விவகாரம் மற்றும் ஜல்லிக் கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்துபேசியுள்ளேன். குறிப்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியை 2 முறை நேரில்சந்தித்தும், பலமுறை போனில் தொடர்புகொண்டும்  காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரியதண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

ஜல்லிக்கட்டு போட்டி விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரை நேரில்சந்தித்து தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். வரும் ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டியுடன் பொங்கல் திரு நாள் நடைபெறும். அதற்குதேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், பிரதமரால் தலையிடமுடியாத நிலை உள்ளது. காவிரி விவகாரம், ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply