ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்தமாதத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.   நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வகைசெய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய்இழப்பை முதல் 5 ஆண்டுக்கு மத்திய அரசு ஈடு செய்ய உள்ளது.  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஒருமித்த கருத்துஎட்ட நவம்பர் 22ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு 6%, 12%, 18% மற்றும் 26% என நான்குவகையாக விதிக்க முடிவுசெய்யப்பட்டதாக தெரிகிறது. இதன்படி குறைந்த பட்ச வரி அத்தியாவசிய பொருட்களுக்கும், அதிகபட்ச வரி ஆடம்பரபொருட்கள், புகையிலை, சிகரெட், மது போன்றவற்றுக்கும் விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்தகூட்டத்தில் வரி விதிப்பு தொடர்பான இறுதிமுடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரிவிதிப்பது என்று அடுத்த கூட்டத்தில் முடிவுசெய்யப்படும். 12 சதவீதம் மற்றும் 18 சதவீதன் என வரிவிதிப்பு நிர்ணயிக்கப் படலாம். வரி விதிப்பு முடிவு செய்யப்பட்ட பிறகு அடுத்தகூட்டம் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும். இதில் இறுதி வரையறை செய்யப்படும்’’ என்றார்.

One response to “ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்தமாதத்துக்கு ஒத்திவைப்பு”

  1. Mithra says:

    டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்கா விட்டால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்தார் click here

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.