மோடி ஆட்சிக்கு வந்தவுடன் நிகழ்ந்து வரும் மாற்றங் களில் ஏர் இந்தியாவில் நிகழ்ந்து வரும்மாற்றங்கள் மிக வும் முக்கியமானது.தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த ஏர் இந்தியா நிறுவனம் மீண்டு எழுந்து சாதனை படைத்து வருகிறது..

கடந்த பத்து ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா இப்பொழுது 105 கோடி ரூபாய் செயல்பாட்டு
லாபம் ஈட்டியுள்ளது.கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு செயல்பாட்டு லாபத்தை அடைந்துள்ளது. அதோடு இன் னொரு சாதனையை செய்துள்ளது ஏர் இந்தியா .உலகி லே யே அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து உலக சாதனையை செய்துள்ளது.

ஏர் இந்தியாவின்,AIR INDIA -173 என்கிற போயிங் விமா னம் டெல்லி யில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான் சிஸ் கோவுக்கு இடையில் எங்கும் நிற்காத பயணிகள் விமான மாக தினமும் சென்று கொண்டிருக்கிறது. இது எப்பொழுது தன்னுடை ய பயணத்தை தொடங்கியது தெரியுமா?

மோடியின் சிலிக்கன் வேலி பயணம் கடந்த ஆண்டு செப் டம்பர் மாதம் நிகழ்ந்தது.அப்பொழுது சிலிக்கன் வேலி யில் உள்ள இந்தியர்கள் விரைவாக இந்தியா சென்று சான்பிரா ன்சிஸ்கோ திரும்பி வர ஏதுவாக நேரடி விமா னம் ஒன்று எங்கும் நிற்காமல் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

சொன்னதை செய்யும் மோடி அரசு இரண்டு மாதங்களி லேயே அதாவது டிசம்பர் மாத துவக்கத்திலேயே சான்பி ரான்ஸிஸ்கோவுக்கு டெல்லியில் இருந்து AIR INDIA -173 என்கிற விமானத்தை இயக்கியது.டில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, அட்லாண்டிக் பெருங் கட ல் வழியாக 13,900 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, ஏர் இந்தியாவின் இந்த இடைநில்லா விமானம் இயக்கப் பட்டு வந்தது.

இது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமா ன நிலையம் உள்ள 13,900 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு சுமார் 17 மணி நேரத்தை எடுத்து கொண் டதுசரியாக என்றால் 16 மணி நேரமும் 55 நிமிடங்களும் எடுத்துக்கொண்டது

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை புகுத்தும் மோடி இந்த ஏர் இந்தியாவின் பயணத்திலும் வித்தியாசத்தை புகுத்தி
விட்டார்.இதன்படி AIR INDIA -173 இனி அட்லாண்டிக் கடல் மார்க்கமாக செல்லாமல் பசிபிக் கடல் வழியாக பறக்க
இருக்கிறது.இதனால் என்ன லாபம் என்கிறீர்களா..

வாழ்வின் ஒரு செகண்டை கூட வீணடிக்காமல் வேகமா க ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.அந்த கூட்டத்தின்
உலகளாவிய தலைவர் மோடி அவர்கள்தான்.இந்த சிலிக் கன்வேலிகூட்டமும் வாழ்வின் ஒரு நொடியைக்கூட வேஸ்டாக கழிக்காமல் இருப்பவர்கள்.ஆனால் நானெல் லாம் பொழுது எப்படிடா கழியும் என்று காத்திருப்பவன்.

சிலிக்கன்வேலி மக்களுக்கு ஒரு பயணத்தில் இரண்டு மணி நேரம் மிச்சமாகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?டெல்லியில் இருந்து சான்பிரான் சிஸ் கோ செல்வதற்கு பசிபிக் பெருங்கடல் வழியாக செல்வத ன் மூலம் இரண்டு மணி நேரம் மிச்சமாகிற து.இப்படிக்கும் பசிபிக் பெருங்கடல் வழியாக சான்பிரான் சி ஸ்கோ செல்வ தற்கு 15,300 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும்.

பார்த்தீர்களா..தூரம் அதிகம் ஆனால் பயணிக்கும் நேரம் குறைவு.இது எப்படி சாத்தியம்? ..மோடி மாதிரி புத்திசாலி
இருந்தால் இந்த உலகில் எதுவும் சாத்தியமே.. அட்லாண் டிக்பெருங்கடல் பாதையில் விமானத்தை காற்று எதிர்த் து தள்ளும்.அதனால் ஜாக்கிரதையாக விமானத்தை மெதுவாக செலுத்துவார்கள்.இதனால் நேரம் அதிகமா கும்.

ஆனால் பசிபிக்பெருங்கடலின்வழியாக விமானம் செல்லு ம்பொழுது விமானத்திற்கு சாதகமான காற்று வீசும் .இத னால் இரண்டு மணி நேரம்விரைவாக விமானம் சென்ற டையும்..பார்த்தீர்களா ஒரு பிரதமர் தன்னுடைய விமானபயணத்தின் பொழுது காற்றின் திசையைக்கூட கணிக்கி றார் என்றால் ஆச்சரியமான விஷயம் தான்.

இந்த டெல்லி டூ சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா பய ணம் உலகசாதனையாக மாறியுள்ளது.ஏனென்றால் இதன் தொலைவு 15,300 கிலோ மீட்டர்.ஆனால் இதற்கு முன்பு துபாய்டூஆக்லாந்து இடையிலான எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 14120 கிலோ மீட்டர் தூர இடை நில்லா பயணமே சாதனையாக இருந்தது.

சாதனை புரிந்துள்ள இந்த ஏர் இந்தியா விமானத்தில் பத்து ஊழியர்களுடன் ரஜ்னீஸ் சர்மா, கவுதம் வெர்மா, கான் மற்றும் பலீமர் ஆகியோர் விமானிகளாக பணி புரிந்துள்ளனர்.

பாருங்கள் ஒரு பயணத்திலேயே காற்றின் திசையை கணித்து விமான பயணத்தை மாற்றி நேரத்தையும்
விமானத்திற்கு செலவாகும் எரிபொருளையும் மிச்சப்படுத்திய மோடி இந்தியாவையும் எதிர் வரும் சவால் களைஇனம் கண்டு சரியான திசையில் கொண்டு செல்கிறார் என்பதை காலம் பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.