வீட்டு வேலைக் காரர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடுதிட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய தொழிலாளர்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அனைவருக்கும் காப்பீடுதிட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக வீட்டுவேலை செய்யும் பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ. மருத்துவகாப்பீட்டு திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக இந்ததிட்டம் டெல்லியிலும் ஐதராபாத்திலும் தொடங்கப்படும். இந்ததிட்டத்தில் சேருபவர்களுக்கு தொழிலாளர்களின் பங்களிப்புடன், தொழில் அதிபர்களின் பங்களிப்பும் இருக்கும்.

இந்ததிட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு ஊழியர்கள் (காவலாளிகள்) ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள்.இதுதொடர்பான பயிற்சிவகுப்புகள் விரைவில் நடை பெறும். அதன் பிறகு இறுதிமுடிவு செய்யப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 1கோடி தொழிலாளர்கள் பயன்அடைவார்கள்.

முன்னதாக அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ. மற்றும் தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்த நிதிமந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான மந்திரிகள்குழு ஆலோசனை நடத்தியது.

தெலுங்கானா மாநிலத்தில் ஊர் காவல்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது கோரிக்கைகள் குறித்து மாநில அரசு பரிசீலிக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply