நாட்டின் வளர்ச்சிக்கான புதியகல்வி கொள்கையில் அரசியல் இல்லை, என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் கூறினார்.

பாரதீய ஜெயின்சங்கத்தின் 32–வது தேசியமாநாடு சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. தொடக்கவிழாவுக்கு சங்கநிறுவனர் சாந்திலால் முத்தா தலைமை தாங்கினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

நாட்டை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தரமானவளர்ச்சியை பிரதமர் எதிர் நோக்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துவருகிறார். குறிப்பாக நமது கல்விதுறையிலும் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுமையான கல்வி முறைகள் தேவைப்படுகிறது. இதனால் கல்வி துறையை மேம்படுத்துவதற்காக புதிய கல்வி கொள்கையை பிரதமர் அறிவித்து உள்ளார். இது நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டுதான் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்விகுறித்த சரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகளை சிதைப்பது புதியகல்வி கொள்கையின் நோக்கமல்ல. புதிய கல்வி கொள்கையால் மனித நேயத்தை வளர்க்கவும், மக்களிடையே ஒருமைப் பாட்டை வளர்ப்பதற்காகவும், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த புதியகல்வி கொள்கை பயன்படும். பல்வேறு மாநிலங்களில் இந்த கல்விகொள்கை குறித்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டுவருகிறது.

புதிய கல்விகொள்கையின் வரைவு பகுதியில் 10 சதவீதம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. இது நிரந்தரம்இல்லை. இதுகுறித்து சரியான புரிதல் இல்லாததால் தமிழ்நாடு மற்றும் கேரளமாநிலங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதுதேவையற்றது.

ஐ–போன் தயாரிக்க வெறும் ரூ.5 ஆயிரம் மட்மே செலவிடப் பட்டாலும், விற்பனை என்று வரும் போது அவை ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.ஆக நல்ல கண்டுப்பிடிப்புக்கு நல்லகல்வி தேவைப்படுகிறது. எனவே தான் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதியகல்வி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது.

 இது குறித்து வரும் 10–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கும் அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்திலும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. அனைவருடைய கருத்துகளையும் கேட்டு நாட்டின் நலன்கருதி இறுதிமுடிவு பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.