ஒருகுறிப்பிட்ட பயிர்களை மட்டுமே தொடர்ந்து பயிரிடாமல், பல்வேறுவகையான பயிர்களையும் பயிரிட்டு, அதன் பலனைப்பெறுவதே, வேளாண் பல்லுயிர் பெருக்கத்தின் அடிப்படை.வேளாண் பல்லுயிர்பெருக்கத்தை அனைவரும் ஏற்கும் வகையில், சர்வதேச நாடுகள் இணைந்து, ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும்.

பல்வேறு பயிர்கள், விலங்குகளின் பலன்களை,அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், அதை பிரபலமாக்கும் வகையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.ஒவ்வொரு நாளும், சராசரியாக, 50 முதல், 150 வகையான விலங்குகள், பயிர்கள், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எந்தெந்த உயிரினங்கள், பயிர்கள் நமக்கு நன்மையை தருகின்றன; எவை ஆபத்தை உருவாக்குகின்றன என்ற பட்டியல் தயாரிக்கவேண்டும்.ஒரு சிலபயிர்கள், விலங்குகள், ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உள்ளன; அவற்றை பரவலாக்க வேண்டும்.

பல்லுயிர்பெருக்கம் தொடர்பான ஆராய்ச்சிகளுடன், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துகொள்ளும் அதே நேரத்தில், நாட்டில், பசி, வறுமை, ஊட்டச் சத்து குறைபாடுகளை நீக்கும் வகையில், வேளாண்மையில் புதிய ஆராய்ச்சிகள், புதியதொழில்நுட்பங்களை புகுத்தவேண்டும்

வேளாண் உற்பத்திக்காக, பசுமைப் புரட்சியை செய்தோம். அதேபோல்,பால் பொருட்கள் உற்பத்திக்காக, வெள்ளை புரட்சி மேற்கொள்ளப் பட்டது. அடுத்தது, கடல்வளத்தை பெருக்குவதற் கான நீலப் புரட்சிக்கு தயாராக வேண்டும்.

மீன் உள்ளிட்ட கடல்  வாழ் உயிரின உற்பத்தியில் மிகப்பெரிய வாய்ப்புகள் நமக்கு உள்ளது. வெறும் மீன்கள் உற்பத்தியோடு நாம் நின்று விடக் கூடாது. கடலில் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

முதலாவது சர்வதேச வேளாண் பல்லுயிர் பெருக்க மாநாடு டில்லியில் நடக்கிறது. மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 60 நாடுகளைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், அரசு பிரதி நிதிகள் என, 900க்கும் மேற்பட்டோர் பங்கேற் கின்றனர். இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply