போலி ரூபாய் நோட்டுகளை கட்டுப்படுத்தவும், ரூபாய் நோட்டுகள் பயங்கரவாதத்திற்கு துணை போவதை தடுக்கவும், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய்க்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது' என, ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்தி காந்த தாஸ் மற்றும் ரிசர்வ்வங்கி கவர்னர் உர்ஜித்படேல், செய்தியாளர் களிடம் கூறியதாவது:

* அனைத்து வங்கிகளுக்கும் தேவையான அளவு, 100 ரூபாய் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

* 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் தகவல், சமூக வலைதளங்களில் முன் கூட்டியே வெளி வந்ததாக கூறப்படுகிறது; அதுபற்றி விசாரணை நடக்கும்

* மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்; பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

* புதிதாக, 500 ரூபாய் மற்றும் 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்படும்

* பண பரிமாற்றத்தின் போது வங்கிகள் வீடியோ கேமராவை பயன்படுத்த வேண்டும்; மக்களும், இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்

* கண்காணிப்பிற்காக, மும்பை ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டு அறை செயல்படும்; அதன் தொலைபேசி எண்:

022 – 2260 2201,2260 2944

* பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, 500 ரூபாய் மற்றும், 1,000 ரூபாய் பணம் பெரிய அளவில் யன்படுத்தப்படுகிறது; மத்திய அரசின் நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம்

* போலியான ரூபாய் நோட்டுகளின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும்

* 2011 முதல் 2016 வரை, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம், 76 சதவீதமும், 1,000ரூபாய் நோட்டுகளின் புழக்கம், 109 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஆனால், பொருளாதார வளர்ச்சி விகிதம், வெறும், 30 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.