ரூபாய் நோட்டு வாபஸ்பெற்ற விவகாரத்தில் மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்கிளை பாராட்டு தெரிவித்தது..500, 1000 நோட்டு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து சீனி அகமது என்பவர் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் அறிவிப்பானது பலநிபுணர்களின் கருத்துகளை கேட்டபிறகு தான் எடுக்கப்பட்டது. நாட்டின் முதன்மை குடிமகனான ஜனாதிபதியே இதனை வரவேற்றுள்ளார். நிதியமைச்சராக இருந்த அவருக்கு நிலைமைபற்றி அவருக்கு தெரியும்.

அரசின் நடவடிக்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. பயங்கரவாத செயல்களுக்கு பெரிய நோட்டுகள்தான் பயன்படுத்துகின்றனர். இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உகந்தது.கறுப்புபணம புழங்குவதால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தமுடிவு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், பாராட்டக்கூடியது தான். நாட்டின் நலனுக்காக பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தில், சிரமங்கள் இருந்தாலும் நிரந்தர நலனை கொண்டு ஏற்கவேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.