முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப்பணத்துக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கினார்கள்.கருப்புப்பணம் என்ற நோய் இந்தியாவை 70 ஆண்டுகள் பீடித்து இருந்தது. எங்களது 17 மாத ஆட்சியில் இந்தநோயை தீர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் அமரவேண்டும் என்பதற்காக நான் தேர்தலில் வெற்றி பெறவில்லை. மக்களுக்காக செயல்படும் பிரதமராக இருக்கவேண்டும் என்பதையே விரும்பினேன். மக்கள்தான் கருப்புபணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களை தேர்ந்தெடுத்தனர். மக்களின் விருப்பமும் அதுதான்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உழைத்து கொண்டு இருக்கிறேன். ஊழல்வாதிகள் சட்ட விரோதமாக சேர்த்து வைக்கும் சொத்துக்களை பறிமுதல்செய்வேன்.

சுதந்திரத்துக்கு பின்னாளில் இருந்து நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்களை வெளிப்படுத்துவேன். இதற்காக ஒருலட்சம் இளைஞர்கள் பணியமர்த்தப் படுவார்கள்.

அடுத்தக்கட்டமாக பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பு மிகச்சரியான நடவடிக்கையாகும். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வங்கிகணக்கு தொடங்க ஏராளமான சுலபமான வழிகள் உள்ளன என்பது மக்களுக்கு நன்றாகதெரியும். டெபிட்கார்டுகள் என்றால் என்ன? கிரிடிட்கார்டுகள் என்றால் என்ன? என்பது மக்களுக்கு இப்போதுதான் தெரிந்து இருக்கிறது.

 


ஒருரூபாய்கூட செலவு இல்லாமல் வங்கி கணக்குகளை மக்கள் தொடங்கமுடியும். மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

10 மாதங்களாக திட்டமிட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ளோம். இது, கருப்புபணத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது மக்களுக்கு தெரியும்.

மத்திய அரசின் நடவடிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்ட மக்களுக்கு நன்றி. நான் எதாவது தவறு செய்து இருந்தால் இந்தநாடு அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நாட்டுக்காக எனது குடும்பத்தை துறந்து குஜராத்தில் இருந்து டெல்லி வந்திருக்கிறேன். நாட்டுக்காக என்னை நெருப்பில்போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ள தயார். நாட்டுக்காக எந்ததியாகத்துக்கும் தயாராக இருக்கிறேன். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன்.

இந்தியாவில் உள்ள நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்படவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தோம். டிசம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் கொடுங்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து காட்டுகிறோம்.

ஏ.டி.எம்.களில் மக்கள் நிற்பது மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானதல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் வங்கி ஊழியர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். சிரமங்கள் இருந்தாலும் மத்திய அரசின் முயற்சியை வெற்றிபெறச் செய்துள்ளனர். மக்கள் ஆதரவு இருப்பதால்தான் மத்திய அரசின் இந்தமுயற்சி வெற்றி பெற்றுள்ளது.

கருப்புப் பண ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட இந்தநடவடிக்கையால் இன்னும் 50 நாட்களுக்கு மட்டும் பாதிப்பு இருக்கும். பொருளாதாரத்தை சுத்தப்படுத்திய பின்பு ஒரு கொசுகூட பறக்க முடியாது. 2-ஜி ஊழலால்தான் மக்கள் ரூ.4 ஆயிரத்துக்கு வரிசையில் காத்து கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் அவர்களை காப்பது எனது கடமை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகே 20 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.

கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும். இதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். எனக்கு எதிராக திரண்டிருக்கும் சக்திகளை பற்றி எனக்குதெரியும். அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள்.  70 ஆண்டுகளாக கொள்ளையடித்து சேர்த்து வைத்த பணத்துக்கு ஆபத்து என்பதால் அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள். நான் தயாராக இருக்கிறேன்.இந்தியாவில் இருந்து பணம் கொள்ளை போவதை நாங்கள் தடுத்துள்ளோம். இது எங்களது கடமையாகும்.


3 நாள் சுற்றுப் பயணம் முடிந்து இன்று தனிவிமானம் மூலம் டெல்லி திரும்பிய பிரதமர் , உடனடியாக கோவாவுக்கு சென்றார். பனாஜி நகரில் கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போது மோடி தனது கருப்புபண ஒழிப்பு திட்டம் குறித்து ஆவேசமாக பேசியது.


மோடி பேசும்போது மார்தட்டி பேசினார். மிகவும் உணர்ச்சி வசப் பட்டவராக இருந்தார். தனது பேச்சின்போது அவர் கண்கலங்கினார். அவரது உணர்ச்சிகரமான பேச்சை விழாவில் கலந்து கொண்டவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

 

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.