ஆர்.எஸ்.எஸ்.,ஸின் மூத்த பிரச்சாரக் ‘சூரிஜி’ என அனைவராலும் அழைக்கப்பட்ட ,அறியப்பட்ட சூரிய நாராயணன் ஜி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக தனது 93ஆம் வயதில் பெங்களூரில் சென்ற வெள்ளிக்கிழமை (18-11-2016) காலமானார்.

இது ஈடு செய்ய முடியாத இழப்பு, இவர் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் மிக மிக மூத்த பிரச்சாரக், கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1924-ன் ஆண்டு பிறந்த சூரிய நாராயணன் , தனது 18-வது வயதில் மாணவர் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றினார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின் 1946 ஆம் ஆண்டு முதல் முழுநேர பிரச்சாரக்காக தேசப்பணியில் தாய் நாட்டுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். 70 வது வருட சுயம் சேவக் ஆவார். ஆரம்ப காலத்தில் கர்நாடகாவில் இருந்து உதித்த மூன்று பிரச்சாரகர்களில் இவரும் ஒருவர். காலம் சென்ற சேஷாத்ரி, செம்பகநாத் ஆகியோர் மற்ற இருவர் ஆவர்.

1969-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள் உடுப்பியில் முதன்  முதலாக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டை நடத்தி காட்டியவர். 1971-ல் இருந்து 1984-ம் ஆண்டுவரை ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு தலைமை பிரசாரகர் (பிராந் பிரச்சாரக்) ஆக பணியாற்றினார், 1990-ம் ஆண்டுவரை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின்  தலைமை பொறுப்பை (சேத்திர பிரச்சாரக்) வகித்ததுடன் அகில பாரதிய சேவா பிரமுக்க்காக பதவி வகித்தார்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, நார்வே, கிழக்காப்பிரிக்கா, கென்யா, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்துமதம், கலாச்சாரம் , பண்பாடு  சார்ந்த பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் பற்றி நாம் கூறுவதை விட சமூகத்தின் மதிப்பு மிக்கவர்களின் கூற்றிலிருந்து கேட்ப்போம்.

 "வாழ்க்கையில் வேள்வி பல நடத்தியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், தன் வாழ்வையே வேள்வி ஆக்கியவர் சூரிஜி

 சூரிஜி  சிறுவயது முதல் தனது அறிவுத்திறனால் படிப்பில் சிறந்து விளங்கினார். அவரது நினைவாற்றல் இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. சுவாமி விவேகானத்தரைப் பற்றியும், ஸ்ரீமத் பகவத் கீதையைப்  பற்றியும் பேசும்போது அதனில் அவரது ஆழ்ந்த ஞானத்தை கண்டு அனைவரும் வியந்துள்ளோம். “

"தமிழகத்தில் சங்க வேலை செய்ய கடினமாக இருந்த அந்த காலகட்டத்தில் அதனை மாற்றி அமைத்து வெற்றிபெற செய்ததில் சூரிஜியின் பங்கு அளப்பரியது. “;- எஸ் வியாஸா யோக பல்கலை துணைவேந்தர் டாக்டர் ராமச்சந்திர பாட ஒரு நிகழ்ச்சியில் கூறியது.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சூரிஜியை சந்தித்தேன். அவரது அயராத உழைப்பு அனைவரையும் போலவே என்னையும் ஆச்சரியப்பட வைத்தது. அவருக்கு தூக்கம் என்பது அவரது இரவு ரயில் பயணத்தில் மட்டுமே கிடைக்கும்.

அவரது கடினமான உழைப்பால் தமிழகத்தின் பிரபலமான பல குடும்பங்களை சங்கப் பணி செய்ய வைத்தார். ராமகிருஷ்ண தபோவனத்தில சுவாமி சித்பவானந்தா அவர்களுக்கு சங்கத்தை அறிமுகப்படுத்தியவர்.”;- வாடா தமிழக பிராந்த சிங்கசாலக் டாக்டர் எம்.எல்.ராஜா ஒரு நிகழ்ச்சியில் பேசியது

 

"குமரியில் விவேகானந்தர் நினைவுச் சின்னம் எழுப்புவதற்காக சூரிஜி வந்தபோது எனக்கு மாணவப் பருவம். அப்போது நான் முக்கிய சிக்ஷாக்காக இருந்தேன். அன்றைய தினம் மைசூரில் நடைபெற்ற அரங்க கூட்டத்தில், சூரிஜி, விவேகானந்தர் குறித்து பேசிய பொது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் விவேகானந்தரே நேரில் வந்து பேசியது போல பிரமை ஏற்ப்பட்டது.

"அகில பாரத சேவா பிரமுக் ஆக பொறுப்பு ஏற்ற பிறகு, நாம் சமுதாயத்தை எப்படி தாயுள்ளத்தோடு பார்க்க வேண்டும் என புரிய வைத்தவர் சூரிஜி.

"சமீபத்தில் கூட ஷிமோகாவில் நடந்த சங்க அறிமுக நிகழ்ச்சியில், சங்க சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்ட நபர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் சூரிஜியின் கருத்தை, பேச்சை கேட்ட பிறகு அன்று முதல் சங்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்”;-   கர்னாடக பிராந்த சங்கசாலக் ஸ்ரீ வெங்கட்ராம் ஒரு நிகழ்ச்சியில் பேசியது.

சங்கத்துடனான எனது ஆரம்பகால தொடர்புகளில் முக்கிய பங்கு வகித்தவர் சூரிஜி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர். அவரது எல்லையற்ற பாசமும், கனிவும் எனது தவறுகளை திருத்திக் கொள்ளவும், என்னிடம் உள்ள நல்ல விசயங்களை நான் வளர்த்துக் கொள்ளவும் உதவியது. என்னை தரமானவனாகவும், அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் வளர்த்தெடுத்தது. நவீன உலக நடைமுறைகளை நான் ஆட்க்கொள்ளவும், என்னை அவை ஆட்க்கொல்லாமல் தவிர்க்கவும் என்னால் முடிந்தது ”;- ஆடிட்டர் குருமூர்த்தி.

 சூரிய நாராயணன் ஜி (சூரிஜி) ஒரு நிகழ்ச்சியில் பேசியது; நம் அனைவருக்கும் இறைவன் சங்கப் பணி செய்ய பொறுப்பு கொடுத்தார். இந்த தூய பணிக்கு கடவுள் என்னை தேர்ந்தேடுத்தமைகாக அவருக்கு நன்றி கூறுகிறேன்.

"ஒருவர் என்னிடம் வந்து 'சங்கத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?' என கேள்வி கேட்டார். 'குறிப்பு வந்தால் அதற்கு கீழ்படிவதுதான் நான் கற்றுக்கொண்டது' என்றேன். உங்கள் அனைவரின் பிரியத்தால் இத்தகைய நிகழ்ச்சி அமைந்துவிடுகிறது. நான் சாட்சி மட்டுமே! தமிழகத்தில் சங்க வளர்ச்சி என்னால் தான் நடைபெற்றது என்றெல்லாம் பேசினார்கள். அவர்கள் எல்லாம் வேலை செய்தபோது நான் அப்போது பொறுப்பில் இருந்தேன், அவ்வளவு தான்.

"இந்த இயக்கம் ஏராளமானவர்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம். ஆயிரக்கணக்கான குடும்பங்களில் உள்ளவர்கள் செய்த தியாகத்தினால் வளர்ந்த இயக்கம் இது. என்னுடன் வளர்ந்தவர்களில் பலர் இன்று இல்லை மாற்றங்களை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதற்கு உங்களின் பிரார்த்தனையும், கடவுளின் ஆசியும் தான் காரணம்" என்றார்.

சூரிஜியின் வார்த்தையையே நாமும் வழிமொழிவோம், அவரை தேசப்பணிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.