கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கொண்டுவந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்களாக ஆக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக இடைத்தேர்தலில் வாக்களித்தவர்கள் சதவீதம் அதிகரித்துஇருப்பது ஒரு ஆரோக்கியமான முடிவுக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன். இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா தடுக்கப்படவில்லை. ஆனால் செல்லாத பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. பணப்பட்டு வாடா கொண்டு நடந்த கடைசி தேர்தலாக இது இருக்கவேண்டும்.

இனி மக்கள் யாரும் பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். எல்லோருடைய வாழ்க்கையிலும் டிசம்பர் 30–ந் தேதிக்கு பிறகு நல்லதுநடக்கும். கெட்டரத்தமான கள்ளபணத்தை ஒழிக்கவில்லை என்றால் இந்தியா உயிரற்ற நாடாக மாறி இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

திருமாவளவன் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கட்டும். மக்கள் அதை கவனிக்க வில்லை. இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தை மறந்துவிட்டு காங்கிரசுடன் திருமாவளவன் பேசுகிறார். நேர்மையாக வாழ்பவர்கள், நேர்மையாக கட்சிநடத்துபவர்கள் பயப்படமாட்டார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள்மனதில் எந்தவித தாக்கத்தையும் எற்படுத்தாது. மக்கள்புரட்சி வெடிக்கும் என்றார்கள். ஆனால் மக்கள் செவி சாய்க்காமல் இந்த திட்டத்துக்கு ஆதரவு தந்துவருகின்றனர்.

வங்கிகளில் வழக்கமான நடைமுறைகள் வந்து விட்டன. ரூ.500 நோட்டுகள் வந்து சில்லரைதட்டுப்பாடு சீரானதும் இப்போது உள்ள குழப்பங்களும் மறைந்துவிடும்.

ஏழை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஆட்சியை பிரதமர் மோடி நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர், நாட்டில் கொண்டுவந்து உள்ள மாபெரும் திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். மாற்றங்கள் கொண்டு வரும்போது சிலசங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை அறிந்துதான் சில மாற்றங்களை செய்து வருகிறார். டிசம்பர் 30–ந் தேதிவரை பணத்தை மாற்றலாம் என்பதால் யாரும் பதற்றமடைய வேண்டாம். கருப்புபணத்தை ஒழிக்க மோடி கொண்டு வந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்களாக ஆக்கும். பொறுத்திருந்து பாருங்கள். பல நாடுகளில் இதுபோல் திட்டம் வராதா? என ஏங்குகிறார்கள்.

மக்களுக்கு நல்லதுசெய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொள்வோம்.

தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி உள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டன. இதனால்தான் காங்கிரஸ் கட்சியை குறைசொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.