கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500,ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். இந்த ரூபாய்நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய்தாள்களை மாற்றிவருகின்றனர். 
 
எனினும் மக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெட்ரோல் நிலையங்கள் மருத்துவ மனைகள் போன்றவற்றில் பழையதாள்களை நவம்பர் 24 ம் தேதிவரை கொடுத்து பயன்பெறலாம் என்று அரசு அறிவித்தது. அதேபோல், சுங்க சாவடிகளில் பல இடங்களில் சில்லறைபிரச்சினை ஏற்பட்டதால் நாடுமுழுவதும் வாகன ஒட்டிகள் தவித்தனர். பல இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில்கொண்டு சுங்க கட்டணம் நவம்பர் 24 ஆம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். 
 
இந்த கெடு இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், சுங்கச் சாவடிகள் கட்டணம் ரத்து டிசம்பர் 2 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக சாலை போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மேலும், கட்டணம் ரத்துகாலம் முடியும் டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் டிசம்பர் 15 ம் தேதி வரை சுங்கச் சாவடிகளில்  பழைய ரூ. 500 தாள்களை வழங்கிகட்டணத்தை செலுத்தலாம்  எனவும் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், எஸ்.பி.ஐ மற்றும் பிறவங்கிகள்  உதவியுடன் போதுமான அளவு ஸ்வைப்பிங் மெஷின்கள் சுங்கச்சாவடிகளில் வைக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.