நாடு முழுவதும் இன்று கருப்பு பண ஒழிப்பில் நமது பாரதபிரமருக்கு ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதை, பல்வேறு குறியீடுகள் நமக்கு உணர்த்துகிறது.  எதிர்கட்சிகளின்; பொய் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை மக்களுக்காகத்தான் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.  அதனால் தான் C Voter நடத்திய கருத்து கணிப்பில் 80% மேற்பட்ட மக்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.


அதே போல நரேந்திரமோடி APP மூலம் பிரதமர் அவர்கள் நேரடியாக பொதுமக்களிடம் கருத்து கேட்டதிலும், கருத்து கணிப்பில் 92 % மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.  இப்படி தங்களின் ஆதரவை சில வழிகளில் தெரிவித்த மக்கள், நேரடியாகவே நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அமோக வெற்றியை தேடித்தந்திருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, தமிழகம் போன்ற மாநிலங்களில் கூட அந்த நம்பிக்கை துளிர்விடுவது போல் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.  மாநில கட்சிகளை தவிர்த்து தேசம் முழுவதும் நடந்த பாரளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 இடங்களில் வெற்றியை தந்துள்ளார்கள்.
திரிபுரா, மேற்குவங்கம் போன்ற மாநில கட்சிகள் பலமாக இருக்கும் இடங்களில் கூட, இரண்டாவது இடத்திற்கு வந்து சொற்ப வாக்குகளிலேயே வெற்றியை இழந்திருக்கிறோம்.  தமிழகத்தில் கூட, சில மாநிலக்கட்சிகளை பின்னுக்கு தள்ளி, திராவிடக்கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை தந்து மக்கள் ஆதரவு தர ஆரம்பித்திருக்கிறார்கள்.  


ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், கணக்கில் காட்டாமல், கணக்கில்லாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணர்வதில் நம் பாரதப்பிரமருக்கு மக்கள் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்;கள்.  வரிசையில் மக்கள் நின்று சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருவோம்.  ஆனால் வருங்காலத்தில் வரிகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாகும் என்பதை உணர்ந்தே, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்;.  நாட்டு மக்கள் அனைவரும் இப்படி ஒட்டுமொத்தமாக பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதால், எதிர்கட்சிகள் அதை பொறுக்க முடியாமல் மக்களை காரணம் காட்டி மக்களவையை முடக்குவதும், மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்வதும், நாடே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமால், நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


  நாட்டு மக்கள் நலனுக்காக திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைகிறார்கள்.   நாடு சந்தித்த மிகப்பெரிய பிரச்சனையாகட்டும், காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும், மக்கள் பிரச்சனைகளுக்காய் ஒன்றிணையாத திமுக, அதிமுக இன்று கறுப்பு பண விவகாரத்தில் கைகோர்திருக்கிறார்கள் என்றால், மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். போராடும் கட்சிகளின் பின்புலத்தை பார்த்தீர்கள் என்றால், மக்கள் பணத்தை வாரி சுருட்டியவர்களும், வரி ஏய்ப்பவர்களும் தான் முன் நிற்கிறார்கள்.  ஆனால் இன்று, வரிசையில் நிற்கும் மக்களைப்பற்றி கவலை படுகிறோம் என்று ஒரு காரணத்தை முன் நிறுத்தி, இதுவரை மக்களைப்பற்றி கவலைப்படாதவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

 அதனால் இன்று மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் எல்லாம், நாளை மக்களின் வாழ்க்கையை சிகரத்தில் ஏற்றுவதற்குத் தான் என்பதை வருங்கால இந்தியா பார்க்கத்தான் போகிறது.  மக்களின் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளி வருவாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வருத்தமடையத்தான் போகிறார்கள்.  திரிணாமுல், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, அதிமுக என்று எல்லோரும் ஏதோ மெகா கூட்டணியை அமைத்துள்ளோம் என்று சொல்கிறார்கள்.  திரு. நரேந்திரமோடி அவர்கள் மக்களுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளார்.  இந்த கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


                                   என்றும் மக்கள்;; பணியில்
                                                                                                                                          

                                                                                   (Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.