ஒடிஸாவில் கடந்த 17 ஆண்டுகளாக செயல் படாமல் ஊழல் அரசாகப் பொறுப்பில்இருக்கும் பிஜு ஜனதாதள ஆட்சியை வரும் 2019 சட்டப் பேரவைத்தேர்தலில் தூக்கியெறியுமாறு மாநில மக்களை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.


புவனேசுவரத்தில் பாஜக சார்பில் மக்கள் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் மாநிலத்துக்கு என்னசெய்தீர்கள்? என முதல்வர் நவீன் பட்நாயக்கைக் கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமராக இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி என்ன செய்தார்? என நவீன்பட்நாயக் எப்போதும் கேட்பார்.

கடந்த 17 ஆண்டுகளாக மாநிலத்துக்கு நீங்கள் (பட்நாயக்) என்ன செய்தீர்கள்? என நான் இப்போதுகேட்கிறேன். மற்ற மாநிலங்கள் நன்கு வளர்ச்சியடைந் திருக்கும் நிலையில் பட்நாயக் ஆட்சி காலத்தில் ஒடிஸா அப்படியே தேக்கமடைந்திருக்கிறது.


பவானிபாட்னாவில், பழங்குடி இனத்தைச்சேர்ந்த தனா மஜி என்பவர் இறந்துபோன தன் மனைவியின் உடலை ஆம்புலன்ஸ் இல்லாததால், தோளில் சுமந்து கொண்டு சுமார் 10 கி.மீ. தூரம் நடந்து வந்தசம்பவம் உலகையே உலுக்கியது. மேலும் ஜாஜ்பூர் மாவட்டம் நகாடா கிராமத்தில் ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் இறந்தது, ஜப்பானிய மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தத்தவறியது உள்ளிட்ட சம்பவங்களைக் காணும்போது மாநிலத்தை ஆளும் உரிமை உண்மையிலேயே உங்களுக்கு (பட்நாயக்) இருக்கிறதா? எனக் கேட்கத் தோன்றுகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சியில் இருந்தபோதிலும், குழாய்மூலம் குடிநீர் விநியோகிக்கும் வசதி அனைத்துக் கிராமங்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. மாநிலத்தில் இன்னும் 41 சதவீத குடும்பங்களுக்கு மின்இணைப்பு இல்லை.


பழங்குடியினர் கிராமங்களில் சுகாதார, மருத்துவ வசதிகளைக் காண முடியவில்லை.மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்க பிஜேடி அரசு தவறிவிட்டதால் தான் அவர்கள் ஆந்திரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் என அண்டை மாநிலங்களுக்கு வேலைதேடி படையெடுக்கின்றனர்.மாநிலம் எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் ஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் என்றார் அமித் ஷா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.