பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது ஒருசிறந்த முன்னுதாரண நடவடிக்கை என சீனா பாராட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு அரசின் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸில், "நிதி சீர்திருத்த நோக்கில் பந்தயத்தில் இறங்கியுள்ள மோடி" என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப் பட்டுள்ளது. அதில், இந்திய பிரதமர் மோடி எடுத்திருப்பது, மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்றும், இத்தகைய நடவடிக்கையை சீனாவில்  கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ரூபாய் நோட்டு சீர்திருத்தம், மோடிக்கான பந்தயமாகும் என்றும், வெற்றிதோல்வியை பொருட்படுத்தாமல் ஒரு முன்னுதாரணத்தை  அவர் உருவாக்கியுள்ளார் என்றும் அந்நாளிதழ் பாராட்டியுள்ளது.  மோடி அரசின் நடவடிக்கை நல்லநோக்கிலானதே என்றும், ஆனால், அதை அமல்படுத்தும்விதம், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பொருத்தே அந்தமுயற்சி வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply