தேசியவாக்காளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியவாக்காளர் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, 'தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன்பின், அவர்கள் ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்' 'இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகள். நம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

Leave a Reply